சென்னை, அக்.30 ரிப்பன் மாளிகைக்கு முதல மைச்சர் வருகிறார் என்றால் காலை முதல் இரவு வரை காத்திருக்க முடியுமா? என்று சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மாநகராட்சி யின் மாதாந் திர கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடை பெற்று வரும் நிலையில், அரசு நிகழ்ச்சிகளுக்கு மாமன்ற உறுப் பினர்களுக்கு எந்த தகவலும் அளிக்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
முன்பெல்லாம் அரசு நிகழ்ச்சி என்றால் மக்கள் தொடர்பு அலுவலர் அழைத்து தகவல் சொல்வார், ஆனால், தற்போது எந்த தகவலும் அளிக்கப் படுவதில்லை என்று மாமன்ற உறுப் பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அப்போது மேயர் பிரியா பேசிய தாவது:
“மாமன்றத்தின் பதவிக் காலம் நிறை வடைய இன்னும் சில மாதங்களே உள்ளன. ஆனால், ஒவ்வொரு மாத மும் இதே குற்றச்சாட்டு எழுகிறது. அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தான். ஒரு திட்டத்தை செயல்படுத்த ஓராண்டுக்கு மேல் ஆகும், அதுவரை அந்த திட்டத்தை மாமன்ற உறுப்பினர்கள் கண்காணித்துப் பணிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அவர்களை அழைக் காமலேயே சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்துவைக் கிறார்கள். அதிகாரிகள் அரசியல் சார்பின்றி செயல்பட வேண்டும்.
மாமன்ற உறுப்பினர்கள், மண்டலத் தலைவர்கள் மட்டுமல்ல; மேயரான எனக்கும் இதே நிலைதான். நான் முதல மைச்சரின் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறுகிறார்கள். முதலமைச்சர் ரிப்பன் மாளிகைக்கு வருகிறார் என்றால் நேரத்தை கூறினால்தான் வர முடியும். அவர் வருகிறார் என்பதற்காக காலையிலிருந்து இரவு வரை ரிப்பன் மாளிகையில் இருக்க முடியுமா? மாமன்ற உறுப்பினர்களை புறக்கணிக்க அதிகாரிகளுக்கு ஏதேனும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டதா? இதற்கு மாமன்றத்தையே கலைத்துவிட்டு போகலாமே” எனத் தெரிவித்தார்.
