2027 சட்டமன்றத் தேர்தல் 5 மாநில அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

- Advertisement -

புதுடில்லி, அக்.28 வரும் 2027-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய அய்ந்து மாநிலங் களில் தேர்தல் பணிகளோடு நேரடியாகத் தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த 5 மாநிலங்கள் உட்பட நாட்டின் 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலைச் சுருக்கமாகத் திருத்தும் பணிகளை மேற் கொள்ளத் தேர்தல் ஆணையம் ஆணையிட்டிருந்தது. மேலும், குறிப்பிட்ட இந்த 5 மாநிலங் களிலும் அடுத்த ஆண்டின் (2027) தொடக்கத்தில் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின்
முக்கிய உத்தரவுகள்

இடமாற்றம் தொடர்பாக அய்ந்து மாநிலங்களுக்கும் தேர் தல் ஆணையம் அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை:  தேர்தல் பணிகளில் நேரடியாக ஈடு பட்டுள்ள அதிகாரிகள், தங்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணியமர்த்தப்பட்டிருந்தால் அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த அதிகாரிகளைத் தேர்தல் பணியில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை, வரும் 2027 மே 31-ஆம் தேதிக்குள் ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணியை நிறைவு செய்யவிருக்கும் அதிகாரிகளையும் அந்த இடங் களில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும். தேர்தல் நேர்மை யாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடை பெறுவதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த வழக்கமான இடமாற்ற நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *