கோடையில் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படும்! மின்வாரியம் மதிப்பீடு

- Advertisement -

சென்னை, அக். 26- தமிழ்நாட்டில் வரும் 2027ஆம் ஆண்டு கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் நிலையில், தினமும் 3,610 மெகாவாட் முதல் 7,971 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை ஏற்படும் என மின்வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டின் நாள்தோறும் சராசரி மின் தேவை சுமார் 16,000 மெகாவாட்டாக உள்ளது. கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், மின் தேவை 20,000 மெகாவாட்டைக் கடக்கிறது.

இந்த ஆண்டு கோடை காலத்தில் மின் தேவை 21,000 மெகாவாட்டாக அதிகரித்தது. கடந்த ஜூலை 14ஆம் தேதி மின் தேவை 21,714 மெகாவாட்டாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

கோடை காலம் முடிந்த பின்னரும் கடந்த மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், நாள்தோறும் மின் தேவை 20,500 மெகாவாட்டாக நீடித்தது.

அதிகரித்த மின் தேவையைப் நிரப்ப செய்யத் தேவையான அளவுக்கு மின்சாரம் கிடைக்காததால், சுமார் 2,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, மின்வாரியம் வெளிச்சந்தையில் குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்தது.

அப்போது ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.35 வரை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வரும் 2027ஆம் ஆண்டு கோடை காலத்தில் தமிழ்நாட்டின் மின் தேவை 23,672 மெகாவாட்டாக அதிகரிக்கும் என மின்வாரியம் கணித்துள்ளது.

குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் மின் பயன்பாடு உச்சத்தை எட்டும். அந்த நேரங்களில் மின் தேவைக்கும் கிடைக்கும் மின்சாரத்துக்கும் இடையே தினமும் 3,610 மெகாவாட் முதல் 7,971 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கொள்முதல் திட்டம்

எதிர்பார்க்கப்படும் மின் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், குறுகிய கால ஒப்பந்தங்களின் கீழ் 3,200 மெகாவாட் மின்சாரத்தையும், நீண்ட கால அடிப்படையில் 1,500 மெகாவாட் மின்சாரத்தையும் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

குறுகிய கால மின்சாரக் கொள்முதல் என்பது ஒரு நாள் முதல் ஓராண்டு வரையிலான ஒப்பந்தங்களைக் குறிக்கும். நீண்ட கால ஒப்பந்தங்கள் என்பது 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரையிலான கால அளவைக் கொண்டதாகும்.

வரும் கோடைக் காலத்தில் அதிகரிக்கக்கூடிய மின் தேவையைச் சமாளித்து, தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கான முன்னேற்பாடுகளில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *