ஜப்பான் பயணத்தை ரத்து செய்த திவ்யா!

- Advertisement -

ஜப்பானில் வசிப்பவர் தோழர் திவ்யா. 2024 ஆம் ஆண்டு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜப்பான் சென்ற போது, உலகின் மிகப் பெரிய “எலக்ட்ரானிக் நகரம்” என்று சொல்லக்கூடிய அகிஹபாரா (Akihabara) என்கிற பகுதிக்குச் சென்றார்கள். அப்போது கூடவே இருந்து உதவி செய்தவர் தோழர் திவ்யா. அதுமட்டுமின்றி, ஆசிரியரைத் தம் காரில் அமர வைத்து அழைத்துப் போக வேண்டும் எனவும் விரும்பினார். அவரது எண்ணத்தை நிறைவேற்றிய ஆசிரியர், தோழர் திவ்யாவை வெகுவாகப் பாராட்டினார்.

உதவி செய்யும் பாங்கு, சரளமாகப் பேசும் விதம், மிகப் பெரிய வாகனத்தையும் எளிதாகக் கையாளும் திறன், டோக்கியோ மாநகரின் சாலைகளை அறிந்து வைத்திருத்தல் எனப் பல்வேறு திறன்கள் குறித்துப் பாராட்டினார். இவையெல்லாம் தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளின் விளைவுகள் என்றும் சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த தோழர் திவ்யா, “என்னை யாரும் இந்த அளவிற்கு மனந் திறந்து பாராட்டியதில்லை. ஆசிரியர் பாராட்டிய பிறகு தான், என் மீதே எனக்கொரு மதிப்பும், நம்பிக்கையும் வந்திருக்கிறது”, என்று கூறினார்.

இப்படியான சூழலில் இந்த மாதம் அக்டோபர் 11, 12 ஆகிய இரண்டு தேதிகளில் ஜப்பானில் மாநாடு நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே தோழர் திவ்யா தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். மாநாடு நடக்கும் சமயத்தில் ஜப்பானுக்குப் போய்விட வேண்டும் எனவும் பயணச்சீட்டு எடுத்துள்ளார். கடைசி நேரத்தில் ஆசிரியர் ஜப்பான் செல்லவில்லை என்று தெரிந்ததும், திவ்யாவும் பயணத்தை ரத்து செய்துவிட்டு, ஆசிரியர் இல்லாத மாநாடா? என்று அவரும் தமிழ்நாட்டிலேயே இருந்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஆசிரியரைச் சந்திக்க நேரம் கேட்டவருக்கு, நேற்று (23.10.2026) அந்த வாய்ப்புக் கிடைத்தது. ஆசிரியரின் உடல்நலனை விசாரித்ததுடன், நூல்களையும் பரிசாகப் பெற்றார். அவருடன் அவரின் மகன் குகனும் வந்திருந்தார். குகனிடம் ஜப்பானிய மொழியில் சில வார்த்தைகளை ஆசிரியர் பேசினார். இந்தச் சந்திப்பின் போது எழுத்தாளர் பிரவீனா என்கிற காளி மற்றும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *