பாலியல் வன்கொடுமை, அடித்துக் கொலை தசரா விழா என்ற பெயரில் நடக்கும் விபரீதம்!

- Advertisement -

கர்நூல், அக். 25- ஆந்திரப் பிரதேசம், கர்நூல் மாவட்டம் தேவரகட்டம் மல்லிகார்சுவசுவாமி கோயில் தசரா திருவிழாவின் ஒரு பகுதியாகக் நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியமான ‘பன்னி விழா’  இந்த ஆண்டும் வழக்கமான வன்முறையுடன் அரங்கேறியுள்ளது.

இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த சோகமும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தசரா திருவிழாவின் போது வெளியூர் ஆண்கள் மது அருந்திவிட்டு ஊரில் உள்ள பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியான தகவலும் வெளிவந்துள்ளது

கர்நூல் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இரு தரப்பு மக்கள், விஜய தசமி நாளில் கோயில் சிலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காகக் குச்சிகள், தடிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய முறைதான் இந்த ‘பன்னி திருவிழா’ (Banni Festival). ஒவ்வொரு ஆண்டும் தற்காப்பு மற்றும் நம்பிக்கையின் பெயரால் நடக்கும் இந்தச் சண்டையில் இரத்தம் சிந்துவது வாடிக்கையாகிவிட்டது.

வழக்கம்போல இந்த ஆண்டும் இரு குழுக்களுக்கு இடையே கடுமையான மோதல் வெடித்தது. கற்கள் மற்றும் தீப்பந்தம் வீசி சண்டையிட்டதில் 100க்கும் மேற்பட்டோருக்கும் தீக்காயம் மற்றும் மண்டை உடைந்தது இதில் ‘போத்துராஜு’ என்ற நபரின் தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வன்முறையில் 70 முதல் 100-க்கும் மேற்பட்டோர் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தசரா திருவிழாவின் போது பாதுகாப்புக்காகக் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த போதிலும், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இந்த வன்முறை விளையாட்டில் ஈடுபடுவதைத் முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியவில்லை. “இது சாதாரண வன்முறை அல்ல, எங்களது உள்ளூர் பாரம்பரியம்” என்று கிராம மக்கள் வாதிட்டாலும், திருவிழாக்களின் பெயரால் மனித உயிர்களைப் பலிகொடுக்கும் இத்தகைய சடங்குகள் நாகரிக சமூகத்தில் பெரும் விவாதத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மத நம்பிக்கைகளின் பெயரால் மனித உயிர்களும், உடமைகளும் சேதமடைவது குறித்து சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருவதுடன், மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

திருவிழாவில் முன்பு மனிதர்களைப் பலியிட்டார்கள் அப்போதுதான் காளி சாந்தி அடைந்து ஊருக்கு நன்மை செய்வார், இம்முறை ஒரு உயிர்பலி நடந்துள்ளது. ஆகவே காளி எங்களுக்கு இந்த ஆண்டு நன்மை கொடுப்பாள், சுபிட்சமாக இருக்கும் என்று ஊர் மக்கள் கூறுகின்றனர்

பாலியல் வன்கொடுமை

கடந்த சில ஆண்டுகளாக ஊர் திருவிழாவில் ஆண்கள் சென்றுவிட கிராமத்தில் சில பெண்கள் வெளியூர் நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சிகர நிகழ்வும் நடந்துள்ளது, ஆனால் இதனால் ஊர் பெயர் கெட்டுப்போகும் என்று கூறி பாலியல் வன்கொடுமை செய்தியை ஊர் பெரியவர்கள் வெளியில் வராமல் பார்த்துகொண்டனர்.

இந்த நிலையில் விழா என்ற பெயரில் உயிரிழப்பு ஏற்படவே ஊரில் உள்ள சிலர் விழா என்ற பெயரில் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்தும் பேசவே இந்த அதிர்ச்சி கர உண்மை வெளிவந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *