ஜோர்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு!

- Advertisement -

அம்மான், அக். 25- ஜோர்டான் தேவாலயத்தில் முகமூடி அணிந்த நபர்கள் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதல்

ஜோர்டான் நாட்டின் தலைநகரான அம்மானில் இருந்து தென்மேற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ள கராக் (Karak) மாகாணத்தில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.

கராக் மாகாணத்தில் உள்ள ஹமூத் கிராமத்தில் உள்ள ஒரு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் ஒருவருக்கு இறுதி நிகழ்வு நடந்து கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த மூன்று தீவிரவாதிகள், திடீரென தேவாலயத்திற்குள் புகுந்து அங்கிருந்த மக்கள் மீது தங்களின் தானியங்கி துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுடத் தொடங்கினர்.

இந்த கொடூர நிகழ்வில் 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் இருவர் தீவிர சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 40 பேரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஜோர்டான் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *