மன்னார்குடி, அக். 25- அக்டோபர் 10ஆம் தேதி அன்று மாலை மன்னை தந்தை பெரியார் சிலை அருகில் சுயமரியாதைச் சுட ரொளி மேனாள் மேல தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் ஆர். பி. சாரங்கன் அவர்களின் நினைவேந்தல் பொதுக்கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கழகப் பொதுக் குழு உறுப்பினர் ஆர். எஸ். அன் பழகன் தலைமை வகித்தார். மாவட்ட கழகத் துணைத் தலை வர் ந. இன்பக்கடல் வரவேற்புரை ஆற்றினார்.
கழக சொற்பொழிவாளர்கள் வழக்குரைஞர் சு. சிங்காரவேலன், இராம. அன்பழகன் ஆகியோர் தொடக்கத்தில் நினைவுரை ஆற்றினர். முன்னதாக, மாவட்டத் தலைவர் ஆர். பி. எஸ். சித் தார்த்தன் இல்லத்திலிருந்து கழகத் தோழர்கள் இருசக்கர வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பாமணியில் உள்ள அய்யா ஆர். பி. எஸ். நினைவு இடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி திராவிடர் கழகக் கொள்கை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கழகச் சொற்பொழிவாளர் பூவை. புலிகேசி ஆற்றிய உரை யில், இன்றைய மாணவர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக தங்கள் நேரத்தை செலவிடு கிறார்கள். அதில் வரக்கூடிய தவறான தகவல்களை நம்பி விடாமல் மாணவர்களே நாங்கள் சொல்லக்கூடிய கருத்துகளை முதலில் அதில் இருக்கக்கூடிய நவீன வலைதளங்களில் மூலம் ஆய்வு செய்து பாருங்கள்.
ஊடகங்களில் சொல்லப் பட்டிருக்கக்கூடிய கருத்துகளில் உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். நாட்டில் படித்த பாமரன். படிக்காத பாமரன் என்று இருவகை உள்ளனர். படிக்காத பாமரனை மாற்றிவிடலாம் படித்த பாமரனை மாற்ற இயலாது.
ஆனால் படித்த பாமரனையும் மாற்றிய பெருமை பெரியார் இயக்கத்திற்கு உண்டு,
திராவிடர் கழகத்திற்கு உண்டு.
படிப்பு வேறு அறிவு வேறு என்று பிரித்துச் சொன்னவர் தந்தை பெரியார்.
பக்தியின் பெயரால் இந்த உலகில் எவ்வளவு அநீதி நடந் துள்ளது, எவ்வளவு சுரண்டல் நடந்துள்ளது என்பதை மாண வர்கள் உணர வேண்டும்.
அறிவு கொண்டு
சிந்தித்து பாருங்கள்
சிந்தித்து பாருங்கள்
ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கச் சொன்னவர். தந்தை பெரியார்.
அறிவு வளர்ச்சி ஏதும் இல்லாத காலத்தில் காட்டு மிராண்டி காலத்தில் தர்ப்பணம் செய்தார்கள். இன்று அறிவியல் உலகில் தர்ப்பணம் செய்வது எவ்வளவு முட்டாள் தனமான செயல். சிந்தித்துப் பாருங்கள் இளைஞர்கள் அறிவை பயன்படுத்த வேண்டும், அறிவியல் சாதனங்களைக் கொண்டு அறியாமை நீக்கிக் கொள்ள வேண்டாமா?
சொர்க்கம் நரகம் இவை எல்லாம் இருக்கிறதா? இல்லையா? அல்லது எங்கு இருக்கிறது? ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்தி அந்த இடத்தை ஆய்வு செய்து பாருங்கள்.
அறிவியல் கருவி உங்கள் உள்ளங் கையில் உள்ளது. ஆனால் உள்ளங்கள் அறியாமை நிரம்பி உள்ளது. உங்கள் அறியாமையை பயன்படுத்தி பார்ப்பனர்கள் அடிமைத்தன கருத்துகளை உங்கள் மூளைகளில் விதைத்து நம்மை பாமரனாக ஆக்கி விட்டு பார்ப்பனர்கள் அனைத்து துறைகளிலும் காலங்காலமாக முன்னேறி வருகிறார்கள், அனைத்து உயர் பதவிகளையும் அபகரித்துக்கொண்டு இருக் கிறார்கள். எம்.எஸ்.சுப்புலட்சுமி தமிழில் பாட மறுத்தார். ஒரு பார்ப்பனரை மணமுடித்த பின் பார்ப்பன சுழ்ச்சியில் வீழ்ந்து, தமிழ் மொழியை புறக்கணித்தார், இதுதான் பார்ப்பனர் சூழ்ச்சி. இவ்வளவு மக்கள் தொகை இருந்தும்பிறகு ஒரு எடிசன் உருவாகவில்லையே, ஒரு அயன்ஸ்டீன் உருவாகவில்லையே. இந்தியாவில் ஒரு நியூட்டன் தமிழ்நாட்டில் உருவாகவில்லையே, அறிவில் சிந்தனை வளரவில் லையே பார்ப்பனர்கள் வளரவிட வில்லை, இந்த ஆபத்துகளை இதன் சூழ்ச்சிகளை மக்கள் உணர வேண்டும் உணர மறுக்கும் மக்களிடம் பார்ப்பனர்கள் சூழ்ச்சிகளை அநீதிகளை தோலுரித்துக் காட்டி அவை அனைத்தும் தமிழர்களுக்கு திராவிடர்களுக்கு ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு, வேலைக்கு, பொருளா தார முன்னேற்றத்திற்கு எதி ரானது, என ஒவ்வொரு நாளும் திராவிடர் கழகம் பேசி வருகிறது. தெருமுனைக் கூட்டமாக, பொதுக்கூட்டமாக, ஆர்ப்பாட்டமாக. மாநாடாக செயல்பட்டு வருகிறது.
இல்லாத கடவுளை வணங்குகி றோம் காத்தலுக்கு அழித்தலுக்கு படைத்தலுக்கு என்று துறைவாரியாக கடவுள் இருந்தும் காலங்காலமாக எங்களுக்கு கல்வி வழங்கவில்லை.
திராவிடர்களின்
கல்வி வளர்ச்சிக்கு…
கல்வி வளர்ச்சிக்கு…
சரஸ்வதியை கும்பிட்டும் என் அப்பாவும் முப்பாட்டனும் கைநாட்டு தான் வைத்தார்கள். திராவிடர்களின் கல்வி வளர்ச்சிக்கு வேலை வாய்ப்பிற்கு பொருளாதார முன்னேற்றத்திற்கு கடவுள் எந்த ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை நேர்த் திக்கடன் மட்டுமே செய்ய சொன்னது.
காந்தி இந்த மதத்தை நம்பிய வரையிலும் அவரை வைத்து இந்து மதத்தை வளர்த்தார்கள் என்று காந்தி இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று சொன்னாரோ அன்றே காந்தியை பழிவாங்கி விட்டார்கள். அவ்வளவு நயவஞ்சகம் மிக்கவர்கள் பார்ப்பனர்கள். அந்தப் பார்ப்பனர்கள் எல்லா சூழ்ச்சியையும் கண்டறிந்து அதை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டி திராவிடர்களுக்கு கல்வியை வேலைவாய்ப்பை பொருளாதார முன்னேற்றத்தையும் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். அந்த திராவிடர் கழகத்தில் தன்னை ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லா மல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் தலைவராக இருந்து கொண்டு இந்த சுற்று வட்டாரப் பகுதியில் இயக்கம் வளர்வதற்கு இயக்கத்தோழர்கள் வளர்வதற்கு ஒரு முக்கியச் சிப்பாயாக பணி யாற்றியவர். தந்தை பெரியார் போர்ப்படைதளபதியாக இயங் கியவர் தான் ஆர்.பி.சாரங்கன் அவர்கள். அதனால் தான் அவருடைய நினைவு நாளை சிறப்பாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.
கொள்கைக்காக..
இப்படிக் கொண்டாடுவதன். மூலமாக அவர் எந்தக் கொள்கைக்காக இயங்கினாரோ அந்தக் கொள்கையை மேலும் தீவிரமாக கொண்டு செல்வதற்கு ஒரு வாய்ப்பு தான் அவர் நினைவு நாள், அதனால் தான் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றோம். அவருக்கு நன்றி செலுத்துகின்றோம். அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையை மேலும் தீவிரமாக செயல்படுத்துவதுதான் அவருடைய நினைவு நாளில் நாம் அனைவரும் ஏற்றுக் கொள் ளக்கூடிய உறுதிமொழி ஆகும். என்று சிறப்பாக உரையாற்றினார்
ப.க. மாநில அமைப்பாளர். சி. இரமேஷ். பகுத்தறிவாளர்கழக மாவட்டக் கழகத் தலைவர் வை.கவுதமன். ப.க. மாவட்ட செயலாளர் தங்க. வீரமணி, மாவட்ட கழகத் துணைச் செயலாளர் வி. புட்பநாதன், மன்னை ஒன்றியத் தலைவர் மு. தமிழ்ச்செல்வன், மன்னார்குடி செல்வம், கழக பொதுக்குழு உறுப்பினர் கோ.கணேசன், கோட்டூர் ஒன்றியச் செயலாளர் எம்.பி.குமார், நீடாமங்கலம் நகரத் தலைவர் இரா. அய்யப்பன், மன்னை நகரத் தலைவர் எஸ். என். உத்திராபதி , நீடாமங்கலம் நகரத்தலைவர் கி. ராஜேந்திரன், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் அறிவழகன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஆ. ஜெ. உமாநாத், திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவர் பொன்முடி, மன்னை ஒன்றியச் செயலாளர் கா. செல்வராஜ், முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் செல்வ ராஜ் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் க.இராஜேஷ் கண்ணன், கழக இளைஞரணி மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மன்னை. சித்து, பகுத்தறிவாளர் கழக மன்னை நகரத் தலைவர் கோவி. அழகிரி மாணவர் கழக மாவட்டச் செயலாளர் சாருக்கான், திராவிடர் கழக நகரச் செயலாளர் அழகேசன், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் அறிவானந்தம், மகதை எம். எஸ். சேகர், மன்னார்குடி சிவா. வணங்காமுடி, மன்னார்குடி ஜெ.சம்பத், மேனாள் கழக மாவட்ட அமைப்பாளர் கைலை. ஊமைத்துரை, மன்னை ஒன்றியத் துணைச் செயலாளர் குணசேகரன், மன்னார்குடி வெங்கட்ராமன், வடுவூர் லோகநாதன், ஆசையொளி, கோட்டூர் ஒன்றிய ப. க. தலைவர். சுருளிராஜன், ப. க. செயலாளர் அ. சுரேஷ், மேலவாசல் திரிசங்கு, குணசேகரன், எடமேலையூர். வீராச்சாமி, லெட்சுமணன், திருப்பலாக்குடி கோவிந்தராஜ், உள்ளிக்கோட்டை, அருளரசன், ஆதனூர் ரெகுபதி, ப.க. மாவட்ட அமைப்பாளர். இரா. கோபால், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இறுதியில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.
