1.50 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி!  சென்னை மாநகராட்சி தகவல்

- Advertisement -

சென்னை, அக். 25- மாநகராட்சி சார்பில் இது வரை 1,50,303 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெரு நாய்களுக்கும் வெறி நாய்க்கடி நோய்த் தடுப்பூசி, அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் தீவிர முகாம்கள் கடந்த ஆக.11ஆம் தேதி அன்று தொடங்கப் பட்டது.

இந்த சிறப்பு முகாமின் மூலம் திருவொற்றியூர் மண்டலத்தில் 12,313 தெருநாய்களுக்கும், மணலி மண்டலத்தில் 7,200, மாதவரம் மண்டலத்தில் 15,038, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 12,477, ராயபுரம் மண்டலத்தில் 8,598, திரு.வி.க நகர் மண்டலத்தில் 13,849, அம்பத்தூர் மண்டலத்தில் 21,844, அண்ணாநகர் மண்டலத்தில் 11,895, தேனாம்பேட்டை மண்டலத்தில் 7,782, கோடம்பாக்கம் மண்டலத்தில் 10,131, ஆலந்தூர் மண்டலத்தில் 4,343, பெருங்குடி மண்டலத்தில் 12,752 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது, வளசரவாக்கம், அடையாறு மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் இம்முகாம் நடைபெற்று வருகிறது. வளசர வாக்கம் மண்டலத்தில் இதுவரை 3,943 தெருநாய்களுக்கும், அடையாறு மண்டலத்தில் 3,985 தெருநாய்களுக்கும், சோழிங் கநல்லூர் மண்டலத்தில் 4,153 தெருநாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆக.11ஆம் தேதி முதல் அக்.21ஆம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 1,50,303 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

‘வெறிநாய்க்கடிநோய் இல்லா சென்னை’ (Rabies Free Chennai) என்ற இலக்கை அடைவதற்கு பொது மக்களும், செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *