உலகின் சிறந்த அறிவியலாளர்கள் பட்டியலில் காந்திகிராம பல்கலை.யின் 11 பேராசிரியர்கள்

1 Min Read
- Advertisement -

சின்னாளபட்டி, அக்.25–- அமெரிக்க பல்கலை. பேராசிரியர் குழு வெளியிட்டுள்ள உலகின் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதல் 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் திண்டுக்கல் காந்திகிராம பல்கலையின் 11 பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் தலைமையிலான குழுவினர் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்களுக்கான பட்டியல் தயாரித்தனர்.

22 அறிவியல் துறைகள், 176 துணை துறைகளில் உலகின் சிறந்த அறிவியலாளர்கள் இப்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். அனைவரது குறைந்தபட்சம் 5 ஆய்வுக் கட்டுரைகள், புலம் மற்றும் துணை புலம் சார்ந்த சதவீதங்களின் அடிப்படையில் தரவரிசை ஏற்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களும், இந்தியாவை சேர்ந்த 3500க்கும் கூடுதலான அறிவியலாளர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.

2025ஆம் ஆண்டு தாக்கத்துக்கான பட்டியலில் காந்திகிராம நிகர் நிலை பல்கலை. அறிவியலாளர்கள் ஓய்வு பெற்ற வேதியியல் பேராசிரியர் சேதுராமன் 66, இயற்பியல் பேராசிரியர் முரளிதரன் 65, கணிதவியல் பேராசிரியர் பாலசுப்பிரமணியம் 59, வேதியியல் பேராசிரியர் மீனாட்சி 62, மறைந்த வேதியியல் துறை பேராசிரியர் ஆபிரகாம் ஜான் 61, இயற்பியல் பேராசிரியர் மாரிமுத்து 54, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை முன்னாள் துணைவேந்தரும் காந்திகிராம பல்கலை கவுரவ இயற்பியல் துறை பேராசிரியருமான ஆறுமுகம் 64, வேதியியல் துறை கவுரவ பேராசிரியர் ரமேஷ் 62, சிறப்பு அழைப்பு பேராசிரியர் அசோக்குமார் 44, உயிரிகள் துறை சிறப்பு அழைப்பு பேராசிரியர் மலைக்கொழுந்தன் 46, நுண்ணுயிரியல் துறை முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிருஷ்ணமூர்த்தி 40, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 2019, 2020, 2021, 2022, 2023, 2024ஆம் ஆண்டுகளில் வெளியான உலகின் சிறந்த அறிவியலாளர்கள் பட்டியலில் காந்திகிராம பல்கலை. பேராசிரியர்கள் இடம் பெற்றிருந்தனர்.

தொடர்ந்து 7ஆவது முறையாக தேர்வாகியுள்ள காந்திகிராம பல்கலை. அறிவியலாளர்களுக்கு துணைவேந்தர் பஞ்சநதம் வாழ்த்து தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *