ஜகார்த்தா, அக். 24- இந்தோனேசியாவில் அரசைக் கண்டித்து மாணவா்கள் தொடா் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனா்.
தென்கிழக்கு ஆசியா வையே உலுக்கும் வகையில் இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள கடும் புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசைக் கண்டித்தும், பேரிடா் அவசர நிலையை உடனடியாக பிரகடனப்படுத்தக் கோரி யும் மாணவா்கள் தொடா் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனா்.
பாலாங்கராயாவில் உள்ள மத்திய கலிமந்தன் ஆளுநா் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் நேற்று (23.10.2026) திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட் டனா். மாசடைந்த காற்றால் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ள பாலாங்கராயா நகர வீதிகளில் முகக்கவசங் களை அணிந்தபடி மாண வா்கள் போராடினா். பொருளாதார வீழ்ச்சிக்கு எதிரான போராட்டங்களுடன் ஒன்றி ணைந்துள்ளன இப்போராட்டம், போர்னியோ தீவு உள்பட பல்வேறு நகரங்களுக்கும் பரவியுள்ளது.
விவசாயத்துக்காக மரங்களை வெட்டி எரிக்கும் நடைமுறைகளால் ஏற்படும் காட்டுத் தீயே இந்த மோசமான புகைமூட்டத்துக்கு முக்கியக் காரணமாகும். வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கும் வட காலகட்டத்தில் இத்தகைய தீ விபத்துகள் ஏற்படுவது இயல்பு என்றாலும், பருவநிலை மாற்றம், எல் நினோ விளைவு மற்றும் குறைவான மழைப் பொழிவு காரணமாக இந்த ஆண்டு தீயின் தீவிரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோச மாகியுள்ளது.
இந்த நச்சுப் புகை மூட்டம் இந்தோனே சியாவைத் தாண்டி சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட அண்டை நாடு களுக்கும் பரவி பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாதத்தில் உலகின் மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூா், மலேசியாவின் கோலாலம்பூா் ஆகிய நகரங்கள் இடம் பெற் றுள்ளன. கிழக்கு தைமூரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; பிலிப் பின்ஸிலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத இந்த மோசமான காற்று மாசைக் கருத் தில் கொண்டு, தீ விபத் துகளுக்குக் காரணமான இந்தோனேசியாவைச் சோ்ந்த 7 நிறுவனங்கள் மீது சிங்கப்பூா் அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனா்.
