அம்மன் சக்தி அவ்வளவுதான்! ஜபல்பூரில் துர்க்கை சிலை ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு; ஆறு பேர் காயம்

1 Min Read
- Advertisement -

ஜபல்பூர், அக்.24 மத்தியப் பிர தேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில், நவராத்திரி விழாவைத் தொடர்ந்து துர்க்கை சிலை கரைப்பின்போது டிராக்டர்-டிராலியின் மீது மின்சாரக் கம்பி விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் காய மடைந்தனர்.

இந்த நிகழ்வு 22.10.2026 அன்று நள்ளிரவுக்குப் பிறகு மாவட்டத் தலை மையகத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலை வில் உள்ள மஜவுலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நள்ளிரவு 12.05 மணிக்கு நிகழ்ந்தது. 50-க்கும் மேற்பட்டோர் துர்க்கை சிலையை சிவில் லைத் பகுதியிலிருந்து நரிலி குளத்தில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

சிலையை ஏற்றிச் சென்ற டிராக்டர் செல்வ தற்காக, மேலே தொங்கிக்கொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியைக் குச்சியால் தூக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது, கம்பி உயர் அழுத்த மின் பாதையுடன் தொடர்பு கொண்டது. எனவே, மின்சாரம் பாய்ந்ததும் அந்தக் கம்பி அறுந்து டிராக்டர்-டிராலியின் மீது விழுந்தது.

டிராக்டரில் அமர்ந்திருந்த விகாஸ் ராஜ்புத் (வயது 22) மற்றும் பிரின்ஸ் சவுகான் (வயது 23) ஆகி யோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் என்று காவல் துணை கோட்ட அதிகாரி மோஹந்தி மராவி தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனை களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, 22.10.2026 அன்று காலை மஜவுலியில் உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுப் போராட்டம் நடத்தினர்.

தாழ்வாகத் தொங்கும் மின்சாரக் கம்பிகள் குறித்து தாங்கள் ஏற்கெனவே காவல்துறை, நிர்வாக அதிகாரிகள் மற்றும் விழா ஏற்பாட்டுக் குழுவினரிடம் தெரிவித்திருந்ததாகவும், அவற்றைச் சரி செய்யுமாறு வலியுறுத்தியி ருந்ததாகவும் உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி னர்.

உடல்கள் உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *