கபில் சிபல் குற்றச்சாட்டு!
புதுடில்லி, அக். 19- ஒன்றிய அரசு நாட்டின் பல்வேறு அரசியலமைப்பு மற்றும் சுயாதீன நிறுவனங்களைக் கைப்பற்ற முயன்று வரு வதாக மூத்த வழக்குரைஞரும், நாடாளு மன்ற உறுப்பினருமான கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.
டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது:
2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் முக்கிய நிறுவனங்களைக் கைப்பற்றுவதையே ஒன்றிய அரசு தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள், ஆளுநர் பதவிகள் எனப் பல அமைப்புகளையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர்.
ஆனால், இதுவரை அவர்களால் கைப்பற்ற முடியாத ஒரே ஒரு நிறுவனம் இந்திய உச்ச நீதிமன்றம் மட்டுமே. உச்சநீதிமன்றத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் மக்கள் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
மக்களின் அமைதியான போராட்ட உரி மைகளை ஒடுக்குவதும், ஜனநாயக ரீதியிலான குரல்களை நசுக்குவதும் அரசியலமைப்புக்கு எதிரானது. தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் நடைபெற்றுள்ள குளறுபடிகள் குறித்து உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
