பக்தியின் பெயரால் அலட்சியம்: உயிர்களைப் பறிக்கின்ற விழாக் காலங்கள்!- புதூரான்

3 Min Read
- Advertisement -

திருவிழா என்பது  மகிழ்ச்சிக்காக கொண்டாடப் படுவது; ஆனால்  அண்மைக் காலமாக உயிரிழப்பு களில்தான் விழாக்கள் முடிகின்றன.

கிருஷ்ண ஜெயந்தியின் போது மனிதக்கோபுரம் அமைத்து உரியடி நிகழ்த்துகிறோம் என்ற பெயரில் ஒருவர் மீது ஒருவர் சரிந்து குஜராத், மகாராட்டிரா மாநிலங்களில் உயிரிழப்புகள் தொடர்கதையாகி உள்ளன. கணபதி விழாக்களில் சிலைகள் கவிழ்ந்தும், சிலை கரைப்பின் போது நீர் நிலைகளில் மூழ்கியும் உயிரிழப்புகள் தொடர்கதையாகி உள்ளன. தீபாவளி முடிந்தாலே அடுத்த வெடி விபத்தால்  பிஞ்சுகளின் பார்வையிழப்பும், உயிரிழப்புகளும் பெரும் செய்தியாக  அச்சாகின்றன.

அந்த வரிசையில் நவராத்திரி விழாவும் தற்போது சேர்ந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்கம் (கொல்கத்தா – துர்கா பூஜை கூட்ட நெரிசல்) உயிரிழப்பு: 17 பேர்

கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜையில் பந்தல்களுக்குள் மற்றும் வெளியே திரண்ட மக்களிடையே ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கிய 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். திட்டமிடப்படாத விழாப்பந்தலில் குறுகிய நுழைவாயிலில் மக்கள் சென்றுகொண்டு இருந்த போது திடீரென மழை வந்ததால் பலர் ஒரே நேரத்தில் உள்ளே செல்வதற்கு முண்டியடிக்கப் பெண்கள், சிறுமிகள் என 19 பேர் உயிரிழந்தனர். இந்தச் செய்தியைப் பொதுவில் பேசினாலே பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என கொல்கத்தா காவல்துறை அறிவித்துள்ளதால் உயிரிழந்தவர்கள் அனாதைப் பிணங்களாகிப் போனார்கள்.

சத்தீஸ்கர்: உயிரிழப்பு: 7 பேர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் தசரா மற்றும் துர்கா சிலி ஊர்வலங்களின்போது கோர்பா என்ற பகுதியில் பாட்னா – புவனேஸ்வர் நெடுஞ்சாலையில் குடித்துவிட்டு பலர் ஆடிக்கொண்டே சென்றனர். ஒரு திருப்பத்தின் போது எதிரே வந்த லாரி சாலையில் ஆடிக்கொண்டு இருந்தவர்கள் மீது மோதியது. இதில் 40க்கும் மேற்பட்டோர் கயமடைந்தனர், 7 பேர் நிகழ்விடத்திலேயே மரணித்தனர்.

பனாரஸ் பகுதியில் துர்க்கை சிலையைக் கரைப்பதற்கு இரு சக்கர வாகனத்தில் தவறான திசையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது சொகுசுப் பேருந்து மோதியதில் 3 இளைஞர்கள் துடிதுடித்து இறந்தனர்.

காங்கேர் பைபாஸ் சாலையிலும் துர்க்கை சிலை கரைக்கச் சென்ற போது நடந்த விபத்தில் 3 இளைஞர்கள் இறந்தனர்.

மகாராட்டிரா மாநிலம் ராய்காரில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பெமேதரா பகுதியில் தசரா விழாவிற்குச் சென்றுவிட்டு 40-க்கும் மேற்பட்டோருடன் திரும்பிய டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பலரும் காயமடைந்தனர்.

கோலாப்பூர் மகாலட்சுமி கோவில் தசரா விழாவினைக் கொண்டாடிவிட்டு காரில் திரும்பியவர்கள்  மதுபோதையில் எதிரே சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆந்திரப் பிரதேசம் (கர்நூல் – பன்னி திருவிழா மோதல்)

ஆந்திரப் பிரதேசம் கர்நூல் பகுதியில் தசரா விழாவின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற ‘பன்னி திருவிழா’ நடைபெற்றபோது ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மற்றும் விரத நிறைவுப் பகுதியின் போது, கடற்கரைப் பூங்கா பகுதியில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக தந்தை, அவரது மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அய்தராபாத் நாதர்குல் பகுதியில் உள்ள எம்.வி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தாண்டியா கொண்டாட்டத்தில் மின்விளக்கு டிரஸ்  திடீரென சரிந்து விழுந்தது.

இதில் வனபர்த்தியை சேர்ந்த சோனி என்ற முதலாம் ஆண்டு மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். அவரது சகோதரி உட்பட 5 பேர் கவலைக்கிடமான நிலையில் காமினேனி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மொத்தம் 17 முதல் 20 பேர் வரை காயமடைந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்தியப் பிரதேசம் குவாலியரில் சீத்தலா தேவி கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் மீது தானியங்கள் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 39 பேர் காயமடைந்தனர்.

சின்சோர் பகுதியில் இருந்து வந்த அந்த லாரி, தடை செய்யப்பட்ட சரிவுப் பாதையில் காவல்துறை வைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு பக்தர்கள் மீது பாய்ந்துள்ளது. இரண்டு காவலர்களும் காயமடைந்தனர்.

இதுவரை மத விழாக்களில் நிகழ்கின்ற அதிக மரணங்கள் பட்டியலில் தற்போது தசராவும் சேர்ந்துவிட்டது. பாதுகாப்புத் தரவேண்டிய அரசுகள் வாக்குவங்கி பாதிப்பு ஏற்படும் என்று விழாக்களை ஒழுங்குபடுத்துவதைக் கைவிட்டதால்தான் இப்படிப்பட்ட விபத்துகள் அதிகமாகி வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *