பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) மாணவர் சங்கப் பிரதிநிதிகள் பதவியேற்பு விழா!

2 Min Read
- Advertisement -

தஞ்சை, அக்.22- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மாணவர் மன்ற பிரதிநிதிகளின் பதவியேற்பு விழா 15.10.2026 அன்று பல்நோக்கு விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நிறுவன துணைத் தலைவர் முனைவர் வீ.அன்புராஜ் தமது உரையில், “இன்றைய தினம் மாணவர் மன்ற பிரதிநிதிகளாக பதவியேற்ற  அனைவரையும் மனமார வாழ்த்துகிறேன். இந்த நாள் இந்நிகழ்ச்சிக்கு பொருத்தமான நாள். ஏனெனில் இன்று இந்திய தேசத்தின் மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அ.பெ.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள். அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது  பணிவு, எளிமை, வலிமை மற்றும் விடா முயற்சி இவைகள் தான் அவரை நாட்டினுடைய குடியரசுத் தலைவராக்கியது.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

நீங்கள் அனைவரும் பொறுப்புமிக்கவர் களாகச் செயல்படவேண்டும். உங்கள் ஆக்கப்பூர்வமான பணிகள் உங்களுக்கும் சக மாணவர்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சமூதாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும். சக மாணவர்களிடையே சாலைப் போக்குவரத்து பற்றிய முழு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருப்பது மாணவர்களின் ஒத்துழைப்பே ஆகும். தந்தை பெரியார் கூறியதைப் போல தீர ஆராய்ந்து செயல்படுபவர்களாக நீங்கள் இருக்கவேண்டும். மாணவர்கள் முடிவெடுப்பதில் வல்லவர்களாகத் திகழ வேண்டும். நமது நிறுவனத்தினுடைய குறிக்கோள்களான புது உலகு, புதிய சிந்தனை, புத்தாக்கம் ஆகியவற்றை முன் நிறுத்தி ஏற்றம் பெற வேண்டுகிறேன்.”  இவ்வாறு கூறினார்.

முன்னதாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட 2026 – 2027 கல்வி ஆண்டிற்கான மாணவர் பிரதிநிதிகளை மாணவர் நல மய்ய இயக்குநர் பேராசிரியர் கா.தமிழ்வாணன் அறிமுகப்படுத்தினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பதவிப் பிரமானம் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மல்லிகா அவர்களால் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலேசகர்கள். 1. எஸ்.அஃப்ரா நிபிலா,
2. இர்பான் சகில் ஆகியோரும், தலைவராக சரோன் ஆஸ்லே,  துணைத்தலைவராக ரூத்ரோஷ், செயலாளராக அஸ்மின் தேவா, இணைச்செயலாளராக சோபிகா ஆகியோருடன் ஒன்பது மன்றங்களுக்கான பொறுப்பு பேராசிரியர்களுடன் மாணவ செயலாளர்கள், ஒவ்வொரு மன்றத்திற்கும் ஒரு இணைச்செயலாளரும் இரண்டு இணைச்செயலாளர்களும் பிரதிநிதிகளுக்கான உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்,

பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பூ.கு.சிறீவித்யா முறைப்படி மாணவர் மன்றத்தை அங்கீகரித்தார்.

முன்னதாக விழாவில் கலந்து கொண்டவர்களை மாணவி ஜேனட் மேன்சி முதலாமாண்டு பொறியியல் துறை அவர்கள் வரவேற்றார்.

நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர் சிறீஹரி மூன்றாமாண்டு உயிரி தொழில்நுட்பத் துறை அவர்கள் நன்றி யுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வல்லம் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஏ.கே.வடிவேலு, வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கண்ணன், பல்கலைக் கழக முன்னாள் மாணவி இந்திரா கண்ணன், வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் வெள்ளிங்கிரி, துணை முதல்வர் ரோஜா, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மையர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *