9ஆம் வகுப்பு மாணவி எம்.யூ. வைஷ்ணவி மைசூரில் நடைபெற்ற 29ஆவது ஆல் இந்திய கராத்தே சேம்பியன்சிப் (29th All India Karate Championship) போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பன்னாட்டு அளவில் ஜப்பானில் நடைபெறவுள்ள கராத்தே போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார். 9ஆம் வகுப்பு மாணவி வி.சஹானா மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கமும் சான்றிதழும் வென்றார். 8ஆம் வகுப்பு மாணவி அய்.அக்சிதா அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றார். 8ஆம் வகுப்பு மாணவி கே.லக்சனா மாநில அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கமும் சான்றிதழும் வென்றார். இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும். பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனைகள்
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
