“விஜய்யை எங்க போய்ப் பார்ப்பீங்க?” பெரம்பூர் தொகுதியில் களமிறங்கி சத்யராஜ் அதிரடி

2 Min Read

பெரம்பூர், ஏப். 19- அவ்ளோ பெரிய சம்பளம் வாங்குறவரை எங்கே போய்ப் பார்ப்பீங்க?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சத்யராஜ்.

2026 சட்டசபை தேர்தலில் சத்யராஜ், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். சட்டமன்றத் தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட் பாளர்களை ஆதரித்து பரப்புரையை தொடங்கி உள்ளார் சத்யராஜ்.

ஏப்ரல் 18 ஆம் தேதி ராய புரம், பெரம்பூர், கொளத்தூர், வில்லி வாக்கம், திரு.வி.க.நகர், அண்ணா நகர் ஆகிய தொகுதிகளில் பிரச் சாரம் செய்த சத்யராஜ். ஏப்ரல் 19ஆம் தேதி மாதவரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

அந்தவகையில் சென்னை பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் சத்யராஜ். பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் நிலையில், அங்கு அவரை கடுமையாக விமர்சித்துப் பிரச்சாரம் செய்துள்ளார் சத்யராஜ்.

சத்யராஜ் பேசுகையில், “தனது கொள்கைத் தலைவராக அம்பேத்கர், பெரியார் எனச் சொன்னபோது, விஜய் அரசியலுக்கு வந்தது பற்றி ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. பேசப் பேச.. தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி மரியாதை இல்லாமல் பேசினார். முதலில் ஸ்டாலின் சார் என்றார். அப்புறம் ஸ்டாலின் அங்கிள் என்று சொன்னார். எல்லோரையும் மரியாதையாகப் பேசும் விஜய் என்ன இப்படி பேசுகிறார் எனத் தோன்றியது. நாம பார்த்த விஜய் இப்படி இல்லையே..

‘தலைவா’ படம் வந்தபோது, கொடநாட்டுக்குப் போய் ஜெயல லிதாவை பார்த்தபோது, அம்மா அம்மா.. என்னை ரொம்ப மன்னிச்சுக்கங்கம்மா.. என்னோட ‘தலைவா’ படத்தை எப்படியாச்சும் ரிலீஸ் பண்ணி விடுங்கம்மானு பேசு னாரு இல்லையா? அப்படித்தான் மரியாதையாக பேசுவார் என்று பார்த்தால் ஸ்டாலின் அங்கிள் எனப் பேசிவிட்டார்.

இப்படி ஜெயலலிதாவை பேசி இருந்தால் கொத்துப் பரோட்டா போட்டிருப்பார்கள். அப்புறம் மேடையில் வந்து நான் ரெடி தான் என்றெல்லாம் பாடியிருக்க முடியாது. ஒரு முதல மைச்சர் பெருந்தன்மையாக இருக் கிறார் என்பதற்காக என்ன வேண்டு மானாலும் பேசுவதா?” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “சின்னச் சம்பளம் வாங்குற என்னையே மக்கள் ஈசியா சந்திச்சு பிரச்சினையை கேட்க முடியாது. அவ்ளோ பெரிய சம்பளம் வாங்குறவரை எங்கே போய் பார்ப்பீங்க?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சத்யராஜ். விஜய் போட்டியிடும் தொகுதியில் நடிகர் சத்யராஜ் களமிறங்கி பிரச்சாரம் செய்திருப்பது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

சத்யராஜ் பல திரைப்படங்களில் சமூக நீதி, திராவிடக் கொள்கைகள், பகுத்தறிவு கருத்துகளை வலியுறுத்திய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அவரது அரசியல் பயணம் திமுகவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் திமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகளைப் பாராட்டி உள்ளார்.. சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஏற்கனவே திமுகவில் இணைந்து, அக்கட்சியின் அய்.டி விங்கில் செயல்பட்டு வருகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *