கைதிகளை அழைத்துச் செல்லும் காவல்துறை வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

1 Min Read

சென்னை, ஏப்.26- கைதிகளை நீதிமன்றம் மற்றும் சிறைக்கு அழைத்துச் செல்லும் காவல்துறை வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள், நீதிமன்ற உத்தரவுப்படி புழல், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப் படுகின்றனர்.

மேலும், அவர்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெறும்போது, காவல் வாகனங்களில் அழைத்துச் செல்லப் பட்டு ஆஜர்படுத்தப் படுகின்றனர்.

பின்னர், அதே வாகனத்தில் அழைத்து வந்து மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். பல நேரங்களில் வெளி மாவட்ட நீதிமன்றங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

சில நேரங்களில், பயங்கர ரவுடிகள் மற்றும் கொடூர குற்றவாளி களை வாகனங்களில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போதோ அல்லது திரும்பி வரும்போதோ பாதுகாப்புக்காக உடன்வரும் காவல் துறையினருடன் வீண் தகராறில் ஈடுபடுகின்றனர்.

சிலசமயம் காவல் துறையினர் தாக்கப்படுகின்றனர். ஆனால், இதன் உண்மைத் தன்மை வெளிவருவது இல்லை. யார் மீது தவறு? தாக்குதல் நடந்ததற்கு என்ன காரணம் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மேலும், நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து வாகனத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது கைதிகளின் உறவினர்கள் கஞ்சா பொட்டலங்களை காவல் வாகனங் களில் வீசும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இத்தகைய பிரச்சினைகளைத் தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை காவல் அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்தியதில், கைதிகளை அழைத்துச் செல்லும் காவல் வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, முதல் கட்டமாக சென்னையில் சிறைக் கைதிகளை அழைத்துச் செல்லும் 50-க்கும் மேற்பட்ட காவல் வாகனங்களில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *