ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கி எஸ்அய்ஆரைக் கைவிடக் கோரிக்கை! நாளை 24 மணி நேரத் தொடர் போராட்டம்! ‘சென்னையின் ஜந்தர் மந்தர் 2.0’ அமைப்பு அறிவிப்பு

2 Min Read
- Advertisement -

சென்னை, அக். 21– வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (எஸ்அய்ஆர்) கைவிடக் கோரியும், 13 கோடி வாக்குகளை நீக்கிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்க வலியுறுத்தியும், 24 மணி நேரத் தொடர் போராட்டத்தை ‘சென்னையின் ஜந்தர் மந்தர் 2.0’ அமைப்பு அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் நாளை (22.10.2026) மாலை 4 மணிக்குத் தொடங்கி, மறுநாள் மாலை 4 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்அய்), இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்அய்), அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (ஏஅய்ஒய்எப்), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஅய்எஸ்எப்), காக்ரோச் ஜனதா பார்ட்டி (சிஜேபி), அகில இந்திய மாணவர் சங்கம் (ஏஅய்எஸ்ஏ), புரட்சிகர வாலிபர் சங்கம் (ஆர்ஒய்ஏ), அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் (ஏஅய்டிஎஸ்ஓ), அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (ஏஅய்டிஒய்ஓ) ஆகிய 9 இயக்கங்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளன.

இதையொட்டி சென்னை பத்திரிகை யாளர் மன்றத்தில் நேற்று (20.10.2026) நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிஒய்எப்அய் மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் பேசினார்.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்அய்ஆரைக் கைவிட வேண்டும், நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், தேர்தல் ஆணையர் நியமனத்தில் கடந்தகால நடைமுறை களைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருவதாகவும், குறிப்பாக டில்லியில் அமித் ஷாவின் காவல்துறையும் துணை ராணுவமும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும் கார்த்திக் கூறினார்.

எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே 24 மணி நேரப் போராட்டம் நடத்தக் காவல்துறையிடம் அனுமதி கோரியும் மறுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிரான போராட்டத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டதை நினைவுகூர்ந்து, காவல்துறையின் தடையை மீறியும் திட்டமிட்டபடி போராட்டம் நடை பெறும் என்றார்.

“எஸ்அய்ஆரை எதிர்த்து ‘இந்தியா’ அணிக் கட்சிகள் நடத்திய போராட் டத்தில் தமிழ்நாடு அமைச்சர் பங்கேற் கிறார்; ஆனால், மாணவர்களும் இளைஞர்களும் ஜனநாயக முறையில் போராட அனுமதி மறுக்கப்படுகிறது. நீட், எஸ்அய்ஆரைத் தவெக எதிர்க்கிறது; ஆனால் போராட அனுமதி மறுக்கிறது. அனுமதி மறுப்பது குறித்து, முதலமைச்சர் விஜய் தலையிட வேண்டும்” என்று கார்த்திக் கூறி, திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் க.பாரதி (ஏஅய்ஒய்எப்), சி.மிருதுளா (எஸ்எப்அய்), இப்ராஹிம் (ஏஅய்எஸ்எப்), தீ.சந்துரு (டிஒய்எப்அய்), ரிஷ்வான் (சிஜேபி), சுகுபாலா (ஏஅயடிஎஸ்ஓ), செபாஸ்டின் (ஏஅயடிஒய்ஓ) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *