ஆர்.எஸ்.எஸ். சீருடையில் மேடையேறிய மகாராட்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ்: அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதா?

2 Min Read
- Advertisement -

நாக்பூர், அக்.21 வரலாற்றில் முதல்முறையாக, மகாராட்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்ன விஸ், நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.விஜய தசமி விழாவில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் அதிகாரப்பூர்வ சீருடையை அணிந்து கலந்து கொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவா தத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாராட்டிராவில் தீவிர ஹிந்துத்துவ அமைப்பா கத் தொடங்கி, பின்னர் அரசியல் கட்சியாக உருவெடுத்து ஆட்சிப் பீடம் ஏறிய சிவசேனா கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் கூட, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாக்களுக்குச் சீருடை அணிந்து சென்றதில்லை. மேலும், ஒன்றிய அமைச்சரவையில் உள்ள பல முக்கியத் தலைவர்கள் மற்றும் மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் பாஜக முதலமைச்சர்கள் எவரும் இதுவரை ஆர்.எஸ்.எஸ். சீருடையோடு இதுபோன்ற விழாக்களில் கலந்துகொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மிக முக்கியமான பொறுப்பில் இருந்தபோதிலும், ஆர்.எஸ்.எஸ் தலைமை அவரை விஜயதசமி மேடைக்கு அழைக்கவில்லை. ஆனால், மகாராட்டிர முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தேவேந்திர பட்னவிஸ் முழுச் சீருடையுடன் மேடையேறியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அரசியலமைப்புச்
சட்டத்தின் மீதான கேள்வி

இந்திய விடுதலைக்குப் பிறகு பல்வேறு காலகட்டங்களில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் அதன் கிளை அமைப்புகள் மீது தீவிர விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. நரேந்திர தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் படுகொலை வரை தொடர்புடைய பல இந்துத்துவா அமைப்புகளுடன் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு உள்ள தொடர்புகள் குறித்து பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

‘ஸனாதன் சன்ஸ்தா’ போன்ற அமைப்புகளுக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நாக்பூர் தலைமை முன்பு மறுத்திருந்தாலும், அந்த அமைப்பைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாக்களில் தொடர்ந்து கலந்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது பற்றுறுதி கொண்டு, மதச்சார்பின்மை யைப் பேணுகின்ற ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பதவி யில் இருக்கும் ஒருவர், சமூக நீதி மற்றும் சமத்து வத்திற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டதாக விமர்சிக்கப்படும் ஓர் அமைப்பின் விழாவில் சீருடை யுடன் பங்கேற்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மாண்பைக் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம்’’ என்று அரசியல் விமர்சகர்களும், ஜனநாயக அமைப்புகளும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *