மீண்டும் ‘‘இராவணா லீலா’’ நடத்தப்பட வேண்டுமா? – கருஞ்சட்டை

3 Min Read
- Advertisement -

டில்லியில், தசரா முடிந்த அடுத்த நாளன்று ’ராம் லீலா’ நிகழ்ச்சி நடை பெறும். இதில், ராமனுக்கு எதிரியான ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் ஆகி யோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவது வழக்கமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு நவராத்திரி முடிந்து அடுத்தநாளான ‘விஜய தசமி’ அன்று ராம் லீலா கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பீதாம்பூரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 30 அடி உயரம் கொண்ட கரப்பான் பூச்சி உருவ பொம்மையையும் சேர்த்து எரிக்க இருப்பதாக விழா ஏற்பாட் டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, இந்த ஆண்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் சிறீ கேசவ் ராம் லீலா கமிட்டி, ”இந்த உருவப் (கரப்பான்) பொம்மையானது அசுத்தம் மற்றும் அழுக்கைக் குறிப்பதாகவும், ‘ஸ்வச் பாரத்’ (தூய்மையான இந்தியா) மற்றும் ஸ்வச் டில்லி (தூய்மையான டில்லி) ஆகிய பிரச்சாரங்களின் கீழ் தூய்மையை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது” எனத் தெரிவித்துள்ளது.

’கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’யானது (சிஜேபி) முன்னதாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. இதன் விளைவாக, அப்போதைய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதராவாக செயல்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, அவர் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஆளும் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமைத்துள்ளது. இராவணன், கும்பகர்ணன், மேகநாதன் பொம்மைகளை எரிக்கும் ராம்லீலா நிகழ்ச்சியில் இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர் முதலியோர் குடும்ப சகிதமாக அமர்ந்து, கைதட்டி இரசித்து மகிழ்ச்சிக் கூத்தாடுவது வாடிக்கை.

இப்பொழுது இந்த வரிசையில் கரப்பான் பூச்சி சிலையும் சேர்க்கப்பட்டுள்ளது. 30 அடி உயரமுள்ள கரப்பான்பூச்சி சிலையையும் சேர்த்து பிஜேபி தசமி நாளன்று எரிக்கிறார்களாம்.

இராமாயணம் என்பது ஆரியர் – திராவிடர்  போராட்டம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

‘‘தென்னிந்தியாவில் இருந்த மக்களே தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்  – விேவகானந்தர் (விவேகானந்தரின் ‘சொற்பொழிவுகளும் கட்டு ரைகளும்’’ எனும் நூலில் ‘இராமாயணம்’ என்ற தலைப்பில் பக்கம் 587 – 589).

‘இராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்திற்கும், ஆரியரல்லாதார் நாகரிகத்திற்கும், (அவற்றின் தலைவர்களான ‘இராமன் இராவணன் ஆகியோர்களால்) நடத்தப்பட்ட போராட்டமாகும். (ராதா குமுத் முகர்ஜி எழுதிய ‘இந்து நாகரிகம்’ எனும் நூலின் 141ஆம் பக்கம்).

‘பாரத, இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களின் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பது எல்லாம் தென்னிந்தியாவை திராவிட நாட்டைப் பற்றியேயாகும்’’ (H.G. Rawlinson  என்பவரால் எழுதப்பட்ட   India : a short cultural history எனும்  நூலில் பக்கம் 155).

இப்படி எத்தனையோ ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ‘ராம்லீலா’ என்ற பெயரில் (ராம்லீலா மைதானம் என்றே பெயர் சூட்டி விட்டனர்).

விஜயதசமியன்று இராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உருவங்களை எரித்துக் கொண்டு வருகிறார்கள்.

இப்பொழுது இந்த மூவர்களோடு, கரப்பான் பூச்சியையும் சேர்த்து எரிக்கிறார்கள்.

ஆரியர்களை எதிர்ப்பவர்களை எரிப்பதுதான் இதன் தத்துவம்.

இன்றைக்கு ஒன்றியத்திலும் பல மாநிலங்களிலும் ஆளக் கூடிய ஆட்சி பாரதீய ஜனதா ஆட்சி. பாரதீய ஜனதா என்பது ஆர்.எஸ்.எஸ.் ஈன்றெடுத்த விஷப் பூச்சி!

இந்த ஆட்சிகளுக்குக் கடும் எதிர்ப்புகளைக் கட்டவிழ்த்துவிடுபவர்கள் கரப்பான்பூச்சிகள் என்ற பெயரில் இயங்கும் இளைஞர்களின், மாணவர்களின் அமைப்பாகும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆரியர்களை எதிர்க்கக் கூடியவர்கள் இந்தக் கரப்பான் பூச்சிகள் எனும் திராவிடர்கள்!

அந்த அடிப்படையில் தான் இராவணன், கும்பகர்ணன், மேகநாதனோடு, கரப்பான் பூச்சிகள் என்ற அமைப்பையும் இணைத்து எரிக்கிறார்கள்.

இதனை எதிர்(ரி)க்கும் வகையில்தான் திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் முதலாண்டு நினைவு (25.12.1974) நாளையொட்டி, இராமன், இலட்சுமணன், சீதை உருவங்களை எரிக்கும் ‘இராவண லீலா’வை எழுச்சியுடன் நடத்தினார்கள் என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்!

வழக்குத் தொடுக்கப்பட்டதுண்டு; இராமன், இலட்சுமணன், சீதை உருவங்களை எரிப்பது குற்றமல்ல என்ற தீர்ப்பையும் பெற்றுத் தந்த வீரத்தாய்தான் அன்னை மணியம்மையார்! மீண்டும் ‘இராவண லீலா’ நடத்தத் தூண்டுகிறதா ஆர்.எஸ்.எஸ். பிஜேபி ஆட்சி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *