கிளைகள் தோறும் கழகக் கொடியேற்றி தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், இனிப்புப் பெட்டகங்கள் வழங்குதல், பெரியார் பட ஊர்வலம், பெரியார் நடை,
குடும்ப விழா, ‘‘பெரியார் கேட்கும் கேள்விகள்’’ புத்தகம் பரப்புதல், பொதுக்கூட்டங்கள்!
தஞ்சை, அக்.20 கிளைகள் தோறும் கழகக் கொடியேற்றி, தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், இனிப்புப் பெட்டகங்கள் வழங்குதல், பெரியார் பட ஊர்வலம், பெரியார் நடை, குடும்ப விழா, ‘பெரியார் கேட்கும் கேள்விகள்’ புத்தகம் பரப்புதல், பொதுக்கூட்டங்கள் என்று தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை எழுச்சியுடன் நடத்தினர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கழகத் தோழர்கள்.
அறிவுலகாசன் தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை இரண்டு மாதங்களுக்குக் கொள்கைப் பரப்பும் விழாவாக நாடெங்கும் பரவலாக மிகச் சிறப்பாக நடத்திட வேண்டும் என செப்டம்பர் 3 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தார்கள்.
அதன் அடிப்படையில், கிளைகள் தோறும் கழகக் கொடியேற்றி, தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், தலைமைக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இனிப்புப் பெட்டகங்கள் வழங்குதல், பெரியார் பட ஊர்வலம், பெரியார் நடை, குடும்ப விழா, ‘பெரியார் கேட்கும் கேள்விகள்’ புத்தகம் பரப்புதல்,பொதுக்கூட்டங்கள் என தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்வுகள் தஞ்சை மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்றன.
மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டி
தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 12.9.2026 அன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
செப்டம்பர்-17: இனிப்புப் பலகார பெட்டகங்கள் வழங்குதல்!
இந்த ஆண்டு சிறப்புத் திட்டமாக தந்தை பெரியார் பிறந்த நாள் மகிழ்வாக நண்பர்கள், உறவினர்கள், தமது தெருவில் வசிப்பவர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திட தலைமைக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இனிப்புப் பலகாரப் பெட்டகங்கள் தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 100 ரூபாய் பெட்டகங்கள் 540, 200 ரூபாய் பெட்டகங்கள் 34 என மொத்தம் 574 பெட்டகங்கள் ரூபாய் 60,800 க்கு வாங்கப்பட்டு செப்டம்பர் 17 அன்று தஞ்சை மாவட்டம், மாநகரம், அனைத்து ஒன்றிய, நகர, கிளைப் பகுதிகளில் அனைவருக்கும் வழங்கித் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது

தஞ்சை மாநகரத்தில் விழா
17.9.2026 அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தஞ்சை மாநகர திராவிடர்கழகம் சார்பில் அன்னை சிவகாமி நகர், மருத்துவக் கல்லூரி பிரவுசர் புத்தக நிலையம்,சுந்தரம் பெயிண்ட்,பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம்,பிள்ளையார்பட்டி ரவுண்டானா, பிள்ளையார்பட்டி சந்துரு இல்லம், வல்லம் புதிய பேருந்து நிலையம், மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வாயில், புலவர் சாமிநாதன் இல்லம், பெரியார் சமூகத் தொடர்கல்வி கல்லூரி,அடைக்கல மாதா நகர் இரா.ஜெயக்குமார் இல்லம்,வங்கி ஊழியர் காலனி கருணாமூர்த்தி இல்லம், பூபதி நினைவு பெரியார் படிப்பகம், பழைய பேருந்து நிலையம் பெரியார் சிலை, ஜெபமாலைபுரம், கரந்தை டேவிட் இல்லம், பள்ளி அக்ரகாரம் பேராசிரியர் ஜோதிபாசு இல்லம்,கரந்தை முருகேசன் இல்லம், கொடிமரத்துமூலை மு. அய்யனார் இல்லம்,கீழ ராஜவீதி பெரியார் இல்லம்,கீழ அலங்கம் சி. அமர்சிங் இல்லம், ஆடைக்கார தெரு பொய்யாமொழி இல்லம்,கோபு. பழனிவேல் இல்லம், கீழவாசல் சாவடி ஆ. லெட்சுமணன் இல்லம், நாஞ்சிக்கோட்டை சாலை பார்வதி நகர்,விளார்பழக்கடை கணேசன் இல்லம் ஆகிய இடங்களுக்கு இருசக்கர வாகனப் பேரணியாகச சென்று கழகக் கொடி ஏற்றி பெரியார் சிலைகளுக்கு மற்றும் பெரியார் படங்களுக்கு மாலை அணிவித்து இனிப்புப் பலகாரங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம், நகரம்
செப்டம்பர் 17 அன்று காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் – நகர திராவிடர் கழகம் சார்பில் ஒரத்தநாடு நகரம், புதூர், ஊரட்சி,கண்ணந்தங்குடி மேலையூர், செட்டி மண்டபம், மேல எலந்தவெட்டி, கண்ணந்தங் குடி கீழையூர்,குலமங்கலம், மன்றாயர் தெரு, தலையாமங்கலம், நெய்வாசல் பெரியார் சமத்துவபுரம், கைகாட்டி, சடையார்கோயில், துறையுண்டார் கோட்டை,வாண்டையார் இருப்பு, மேல உள்ளூர்,தெற்கு நத்தம், பஞ்சநிதி கோட்டை,நெல்லுப்பட்டு,நடுவூர், அரும்பளை, மருங்குளம்,கோபால் நகர், வீர முண்டார் குடிக்காடு, சேதுராயன் குடிக்காடு, ஆயங்குடி,மண்டலக்கோட்டை ஆகிய ஊர்களில் இருசக்கர வாகனப் பேரணியாகசென்று கழகக் கொடியேற்றி பெரியார் சிலை மற்றும் பெரியார் படங்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி ஒலிபெருக்கி மூலமாக கழகக் கொள்கைகளை விளக்கி மிக எழுச்சியுடன் விழா கொண்டாடப்பட்டது.
ஒரத்தநாட்டில் பெரியார் பட ஊர்வலம்
தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய – நகர திராவிடர் கழகம் சார்பில், செப்டம்பர் 17 மாலை 6 மணிக்கு ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பெரியார் பட ஊர்வலம் தாரை தப்பட்டை இசையுடன் கழகத் தோழர்களின் கொள்கை முழக்கத்துடன் கடைவீதி, அண்ணா சிலை, பெரியார் சிலை வழியாக பேருந்து நிலையத்தை வந்து அடைந்து முடிவுற்றது.

ஒரத்தநாடு தெற்கு ஒன்றியம்
செப்டம்பர் 17 காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் நெடுவாக்கோட்டை, கக்கரக்கோட்டை, பின்னையூர், கோவிலூர்,பூவத்தூர், பொட்டலங்குடிக்காடு, மேல வன்னிப்பட்டு, கீழவனிப்பட்டு, ஒக்கநாடு மேலையூர், காவராப்பட்டு, கருவிழிக்க்காடு,சமையன் குடிக்காடு, மழவராயர் தெரு, பெரியார் நகர், திருமங்கலக்கோட்டை, முக்கரை, வடசேரி, கண்ணுகுடி,தொண்டராம்பட்டு, புலவன்கடு ஆகிய ஊருக்கு இருசக்கர வாகனப் பேரணியாகச சென்று கழகக் கொடியேற்றி, பெரியார் சிலை, பெரியார் படங்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
பூதலூர் ஒன்றியம்
செப்டம்பர் 17 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூதலூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் அகரப்பேட்டை, நேமம், இளங்காடு, பழமாநேரி, திருக்காட்டுப்பள்ளி, முல்லைக்குடி, பூதலூர், ஆவாரம்பட்டி, செங்கிப்பட்டி பெரியார் சமத்துவபுரம் ஆகிய இடங்களுக்கு வேன் பிரச்சாரமாகச் சென்று கழகக் கொடியேற்றி பெரியார் சிலை,பெரியார் படங்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
திருவையாறு ஒன்றியம்
செப்டம்பர் 17 அன்று காலை 10 மணி அளவில் திருவையாறு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், கண்டியூர் மற்றும் திருவையாறில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
அம்மாபேட்டை ஒன்றியம்
செப்டம்பர் 17 அம்மாபேட்டை ஒன்றியம் சூழியக்கோட்டையில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கும், சாலியமங்கலத்தில் பெரியார் படத்திற்கும் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி, வெடி வெடித்து மாலை சாலியமங்கலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு விருந்து என மகிழ்ச்சியுடன் மிகச் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
திருவோணம் ஒன்றியம்
திருவோணம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், செப்டம்பர் 17 அன்று சோழகன் குடிக்காடு மற்றும் சில்லத்தூரில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்
தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொது கூட்டங்கள் தஞ்சை மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
செப்டம்பர் 17 அன்று ஒரத்தநாடு தெற்கு ஒன்றியம் புலவன்காட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கழகப் பேச்சாளர் இரா. பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார். செப்டம்பர் 17 அன்று அம்மா பேட்டை ஒன்றியம் சாலியமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகச் சொற்பொழிவாளர் பூவை. புலிகேசி சிறப்புரை யாற்றினார்.
செப்டம்பர் 18 அன்று ஒரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஊடகவியலாளர் இந்திர குமார் தேரடி சிறப்புரை ஆற்றினார்.
செப்டம்பர் 26 அன்று மாலை 6 மணி அளவில் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய– நகர திராவிடர் கழகம் சார்பில் ஒரத்தநாட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.
அக்டோபர் 4 அன்று தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில், தஞ்சாவூர் ஆர்.ஆர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.
செப்டம்பர் 19 தஞ்சையில் பெரியார் நடை
தஞ்சாவூர் மாவட்ட, மாநகர திராவிடர் கழகம் மற்றும் தஞ்சாவூர் ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் இணைந்து – தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடத்திய சமத்துவம், சமூக நீதிக்கானப் பெரியார் நடை செப்டம்பர் 19 காலை 6.30 மணி முதல் 8 மணி வரை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, பழைய வீட்டு வசதி வாரியம், புதுக்கோட்டை சாலை, ஆர்ஆர் நகர் வழியாக, புதிய பேருந்து நிலையம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சுமார் 1000 நபர்கள் பங்கேற்க மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
பெரியார் கொள்கைக் குடும்பங்கள்
ஒன்று கூடுகை குடும்ப விழா
தந்தை பெரியார்148 ஆம்ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட,மாநகர திராவிடர் கழகம் சார்பில் அக்டோபர் 4 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசாமி திருமண மண்டபத்தில், பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடுகை குடும்ப விழா நிகழ்ச்சி மகளிர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெரியார்பிஞ்சுகள், பெரியார் பெருந் தொண்டர்கள் என சுமார் 300 நபர்கள் பங்கேற்புடன் மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, சிறார் எழுத்தாளர் சங்க மாநில பொருளாளர் கார்த்திகாவின் குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மகப்பேறு மருத்துவர் டாக்டர் த.தமிழ்மணி ஆகியோர் பங்கேற்று கருத்துரை ஆற்றினர்.
‘பெரியார் கேட்கும் கேள்விகள்’ புத்தகம் பரப்புதல்
அக்டோபர் 4 மாலை 5 மணி முதல் 7 மணி வரை தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணி,திராவிட மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் தொடங்கி புதிய வீட்டு வசதி வாரியம் குறிஞ்சித் தெரு,ஆர்.ஆர். நகர் வரை ‘பெரியார் கேட்கும் கேள்விகள்’ என்ற புத்தகத்தை பொதுமக்களிடம் நன்கொடைப் பெற்று பரப்பும் பணி மிக சிறப்பாக நடைபெற்றது.
பெரியார் நடை, குடும்ப விழா சிறப்புப் பாடல்கள் வெளியீடு
பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தஞ்சையில் நடைபெற்ற பெரியார் நடை மற்றும் பெரியார் கொள்கைக் குடும்ப விழாக்களுக்கான இரண்டு சிறப்புப் பாடல்கள் திராவிடர் கழக கலைத்துறை சார்பில் மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தனின் எழுத்து, ஆக்கத்தில் வெளியிடப்பட்டுச் சிறப்பாக ஒலிபரப்பப்பட்டுத் தமிழ்நாடு முழுவதும் அந்தப் பாடல்கள் பெரியார் நடை குடும்ப விழாக்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி
தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தஞ்சை பொய்யாமொழியின் தன்டர் விளையாட்டுக் கழகம், தஞ்சாவூர் திருவையாறு ரோட்டரி சங்கங்கள், தஞ்சை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய சிலம்பம், யோகா மாணவர்கள் 100 மிதிவண்டிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (நிகர்நிலை அக்டோபர் 10 காலை 8 மணிக்குத் தொடங்கி, பிள்ளையார்பட்டி ரவுண்டானாவில் முடிவடைய 9 மணி வரை மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி தலைமையில் ரோட்டரி சங்கங்களின் மாவட்ட ஆளுநர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயற்குழுவில் அறிவிக்கப்பட்ட அத்தனைப் பணிகளையும் தஞ்சை மாவட்டத்தில் மாநகரம்,அனைத்து ஒன்றிய, நகர, கிளைக்கழக பகுதி களில் பரவலாக தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொள்கை விழாவாக, மிகவும் சிறப்பாக நடத்திய தஞ்சாவூர் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
