கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.10.2026

2 Min Read
- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* சி.ஜே.பி. தலைவர்கள் தாஸ், ரங்கா மீது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகக் குற்றச்சாட்டு – காவல் நீட்டிப்பு: ஜந்தர் மந்தரில் தேர்தல் ஆணையத்தின் எஸ்.அய்.ஆர் நடவடிக்கைக்கு எதிராகப் போராடிய சி.ஜே.பி. தலைவர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

* போராட்டத் தலைவர்களின் நீதிமன்ற விசாரணைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவதாகவும், இது சட்டவிரோதக் காவலை நீட்டிக்கும் முயற்சி என்றும் சி.ஜே.பி. நிறுவநர் அபிஜீத் தீப்கே குற்றச்சாட்டு. “அச்சமின்றிப் போராடுவதே உண்மையான வலிமை; இளைஞர்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்” எனக் கூறிய அவர், தலைவர்களின் உறுதி மற்ற இளைஞர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்றார்.

டெக்கான் ஹெரால்டு:

* எஸ்.அய்.ஆர். முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டத்தில் சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) இணைகிறது! வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தில் (SIR) நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டத்தில் SKM இணைந்துள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். விவசாயிகள், தொழிலாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் தாழ்த்தப் பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து வாக்குரிமையைப் பாதுகாக்கும் இப்போராட்டம், ஒன்றிய அரசுக்கு எதிரானப் பெரிய இயக்கமாக மாறும் என அவர்  நம்பிக்கை.

தி டெலிகிராப்:

* “அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான எஸ்.அய்.ஆர்-அய் நிறுத்துக!” – காங்கிரஸ் வலியுறுத்தல்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தில் (SIR) தவறாக நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும் என காங்கிரஸ் கோரியுள்ளது. டில்லியில் இரண்டு வாக்குச்சாவடிகளில் மட்டும் 100 வாக்காளர்கள் தவறாக நீக்கப்பட்டதாக கூறிய ஜெய்ராம் ரமேஷ், எஸ்.அய்.ஆர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மணிப்பூரில் மீண்டும் வன்முறை: மூன்று பேர் உயிரிழப்பு; முதலமைச்சர் இல்லம் முன் உடல் களுடன் போராட்டம்: மணிப்பூரில் விறகு சேகரிக்கச் சென்றவர்கள் மீது சந்தேகிக்கப்படும் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர், மேலும் 3 பேரைக் காணவில்லை. தொடர் வன்முறையைக் கண்டித்து, உயிரிழந்தவர்களில் இருவரின் உடல்களை முதலமைச்சர் இல்லம் முன் வைத்து மக்கள் போராட்டம் நடத்தினர்; இம்பாலில் கடைகள் மூடப்பட்டு சாலை மறியல்களும் நடைபெற்றன.

* நாடாளுமன்றத்தின் குறுகிய காலக் கூட்டத்தொடர் கூட்டப்படலாம் எனத் தகவல்: தொகுதி மறுவரையறை பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை – ஒன்றிய அரசு குற்றச்சாட்டு: தொகுதி மறுவரையறை தொடர்பாகப் பல எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், காங்கிரஸ் விவாதத்திற்கான தேதியை வழங்காததால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இது தொடர்பான சட்ட முன்வடிவை விவாதிக்க நாடாளுமன்றத்தின் குறுகிய காலக் கூட்டத்தொடர் கூட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *