டில்லி ஜந்தர் மந்தர் போராட்டம் புகார்களைப் பதிவு செய்ய சிறப்பு இணையதளம் அறிமுகம் – உச்சநீதிமன்றம் நடவடிக்கை!

- Advertisement -

புதுடில்லி, அக்.19 டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறைகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை அளிக்கச் சிறப்பு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித் துள்ளது.

கடந்த 2026-ஆம் ஆண்டு ஜூன் 6 முதல் ஜூலை 25 வரை, டில்லி ஜந்தர் மந்தரில் தேசிய அளவிலான தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், 2026 நீட் (NEET) தேர்வுத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) திரையில் மதிப்பிடும் முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந் திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், பொதுத் தேர்வுகளில் பரந்த சீர்தி ருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி சிஜெபி, காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து மாணவர்கள் குரல் கொடுத்தனர்.

ஜூன் 28 அன்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்ட களத்தில் காலவரையற்ற பட்டினிப் போரைத் தொடங்கியதைத் தொடர்ந்து, இந்தப் போராட்டம் நாடு தழுவிய கவனத்தைப் பெற்றது.

நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஜூலை 20 அன்று ஆயிரக்கணக்கான மாணவர்களும், ஜென் Z (Gen Z) இளைஞர்களும் காவல் துறையின் தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். போராட்டக்காரர்களைத் தடுக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றனர். இதில் காவல்துறையினர் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன.

சிறப்பு இணையதளம் உச்சநீதிமன்றம் உத்தரவு

காவல்துறையின் அத்துமீறல்கள் தொடர்பாகப் பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, போராட் டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் தங்களின் புகார் களைப் பதிவு செய்ய http://hpec.nic.in என்ற தனித்த இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார்களில், பெல்லட் குண்டுகள் பயன்பாடு மற்றும் பெண்கள் மீதான வன்முறை தொடர்பான புகார்களுக்கு முன்னுரிமை அளித்து விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *