பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கொல்கத்தா, ஏப்.27 மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விளக்கங்களை அளித்துள்ளது.
2ஆம் கட்டத் தேர்தல்
மேற்கு வங்கத்தில் முதற்கட்டப் பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று (27.4.2026) மாலையுடன் நிறைவடைகிறது.
தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக நேற்று (26.4.2026) நடைபெற்ற உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், தேர்தல் அதிகாரிகள், மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒன்றிய பாது காப்புப் படை கமாண்டர்கள் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
அச்சமற்ற வாக்குப்பதிவு: வாக்காளர்கள் எவ்விதப் பயமுமின்றி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
படைப்பிரிவு நிலைநிறுத்தம்: தொகுதி வாரியாகப் பாதுகாப்புப் படையினர் சிறப்பாக நிலை நிறுத்தப்படுவார்கள்.
ரோந்துப் பணி: உட்புறச் சந்துகள் மற்றும் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படும்.
பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, விரைவான செயல்பாட்டிற்காக 160 மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பைக்கிலும் தலா இரண்டு ஒன்றிய ஆயுதக் காவல் படை வீரர்கள் அமர்ந்து தொகுதி முழுவதும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கள்ள வாக்குப்பதிவோ அல்லது வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றும் முயற்சியோ எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படாது. அமைதியான முறையில் தேர்தல் நடப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர்களைத் தடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தேர்தலை நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயா ராகி வருகிறது என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி. மனோஜ் குமார் அகர்வால் கூறினார்,
