கோவாவில் வாக்காளர் பட்டியலில் நேபாள நாட்டினர் சேர்க்கை ‘கோவா ஃபார்வர்ட் கட்சி’ குற்றச்சாட்டு!

- Advertisement -

பனாஜி, அக். 19- நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோவாவில் இந்திய குடியுரிமை இல்லாத நேபாள நாட்டினர் சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ‘கோவா ஃபார்வர்ட் கட்சி’ பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இது குறித்து பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய கோவா ஃபார்வர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் தெரிவித்ததாவது:

எஸ்அய்ஆர் (SIR) பணியின்போது, இந்திய குடியுரிமை பெறாத பல நேபாள குடிமக்களின் பெயர்கள் கோவா வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் எவ்வாறு இந்தியாவின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவாவில் 2012 மற்றும் 2017 சட்டமன்றத் தேர்தல்களின்போது ‘கர்டோரிம்’ தொகுதியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள், முகவரிகள் ஏதும் மாறாத நிலையிலும், 2022 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான ‘ஃபட்டோர்டா’ தொகுதி வாக்காளர் பட்டியலுக்குச் சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் நடந்துள்ள இந்த முறைகேடுகள் குறித்து உடனடியாகவும் நேர்மையாகவும் விரைந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, கோவா தலைமை தேர்தல் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அனுப்பப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் இத்தகைய முறைகேடுகள் நடந்திருப்பது கோவா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம்
சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்கு
ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம்!

அமராவதி, அக். 19- தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான அமைப்பில் ஆளுங்கட்சியின் தலையீடு இருக்கக் கூடாது என்றும், அதற்காக நடுநிலையான தேர்வுக்குழு உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

தாடேப்பள்ளியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2023-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்திற்குத் தனது கட்சி ஆதரவு அளித்ததற்காக வருத்தம் தெரிவித்தார். மேலும், “ஒரு தேர்வை எழுதும் மாணவரே தனக்கான தேர்வு அதிகாரியை நியமிக்கக் கூடாது” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆந்திராவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டினார்.  திருப்பதி, கடப்பா, புலிவெந்துலா மற்றும் புங்கனூர் ஆகிய பகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் களின் வேட்புமனுக்கள் பறிக்கப்பட்டதாகவும், காவல்துறையினரைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்கள் மற்றும் பொய் வழக்குகள் போடுவதாகவும் சாடினார்.

மாநிலத்தில் 46 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ள போதிலும், வாக்காளர் பட்டியலைச் சீரமைக்காமல் அரசு அவசர அவசரமாகத் தேர்தலை நடத்த முனைப்பு காட்டுகிறது. இடஒதுக்கீடு விவரங்கள் வெளியான அடுத்த நாளே தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகளுக்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை. வார்டுகளின் எல்லை மறுவரையறை ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவே செய்யப்பட்டுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையரும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகச் செயல்படுகிறார். மாநிலத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதிலும் முதலமைச்சரின் தலையீடு இல்லாத நடுநிலையான நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *