உலகச் செய்திகள்

2 Min Read

நைஜீரியா: பயங்கரவாதிகளால்
கடத்தப்பட்ட 360 பேரை மீட்ட ராணுவம்

அபுஜா, ஜூன் 9– மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் அய்.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சி குழுக்கள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை இந்த பயங்கரவாத கும்பல்கள் கடத்தி வருகின்றன.

இதனிடையே, இந்த ஆண்டு தொடக்கத்தில் நைஜீரியாவின் பொர்னோ மாகாணத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் பொதுமக்கள் 360 பேரை கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பொதுமக்களை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பொதுமக்கள் 360 பேரை ராணுவம் 7.6.2026 அன்று அதிரடியாக மீட்டுள்ளது. கடத்தப்பட்ட பொதுமக்கள் பொர்னோ மாகாணத்தில் உள்ள மண்டரா மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவு:
குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை

உலக செய்திகள்

குவைத், ஜூன் 9- ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்ட குவைத் அரசுத் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஷைனப் தஸ்தி என்ற அந்த செய்தி வாசிப்பாளர், அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானைத் தாக்கியது தொடர்பாக ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடங்களில் சில கருத்துகளைப் பதிவிட்டார். குவைத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் உள்பட பல இடங்களை ஈரான் தாக்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஷைனப் பதிவிட்டது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு குவைத்தில் கடந்த சில மாதங்களாக அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயமாக இருந்தது.

இந்நிலையில், ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டில் ஷைனப் தஸ்திக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதை அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதற்கு ஜனநாயக ஆதரவாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *