கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.5.2026

3 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழு, வெற்றி வாய்ப்புள்ளவர்களை புறக்கணித்தனர் காங். வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய ஊழல்: ஜோதிமணி எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு.

* திருச்செந்தூர் கோயிலில் ஆய்வுக்கு வந்த அறநிலையத்துறை அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்: 3 பேர் சஸ்பெண்ட்: 2 பேர் டிஸ்மிஸ்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* வாக்காளர் சிறப்பு திருத்தம் (எஸ்.அய்.ஆர்) குறித்து மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்; மேற்கு வங்கத்தில் எஸ்.அய்.ஆர். மூலமாகத்தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது, காங்கிரசாருக்கு தெலுங்கானா முதலமைச்சர் அறிவுறுத்தல்.

* நீட் வினாத்தாள் கசிவு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது; உரியவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.

* பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம், உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘வந்தே மாதரம்’ சர்ச்சை: முழுமையான ‘வந்தே மாதரம்’ பாடலை தவிர்த்ததால், கேரளாவின் புதிய அரசுக்கு எழுந்த முதல் சிக்கல். ஆளுநர் அவையில் ஆற்றவிருந்த முறைசார்ந்த உரைக்கு முன்னதாக, ‘வந்தே மாதரம்’ பாடலின் முழுமையான வடிவத்தை ஒலிக்கச் செய்ய வேண்டாம் என்று காங்கிரஸ் அரசு முடிவெடுத்ததே இந்தச் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது.

* பாஜக டபுள் என்ஜின் சர்க்கார் அவலம்:அதிகப்படியான பணிச்சுமை, போதிய பணியாளர்கள் இன்மை கொண்ட மகப்பேறு வார்டுகள்; ஓராண்டில் 53 மரணங்கள்: இறந்த தாய்மார்களின் சராசரி வயது 26; அவர்களில் மிக இளையவர் 19 வயதுடையவர். ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில், மத்தியப் பிரதேசத்தின் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும், பிரசவத்திற்கு முன்னரோ, பிரசவத்தின் போதோ அல்லது பிரசவத்திற்கு பின்னரோ என மொத்தம் 53 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, வங்காளத்தின் கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் சார்ந்த அமைப்புகளின் விரிவாக்கம் அதி வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முன்னதாக 96 கல்லூரிகளில் மட்டுமே தங்கள் மாணவர் அமைப்பு செயல்பட்டு வந்ததாக ஏபிவிபி தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கை 400-க்கும் மேலாக உயர்ந்துள்ளது;

தி இந்து:

* தவெகவின் ‘குதிரை பேரம்’ குறித்து CBI விசாரணை கோருவோம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், தனது நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) குதிரை பேரம் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஅய் விசாரணை கோரப்படும் என்று, அதிமுகவின் கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

* சி.பி.எஸ்.இ.. விவகாரத்தில் மோடியின் மவுனம் குறித்து ராகுல் கேள்வி. டி.சி.எஸ். (TCS) நிறுவனத்தை விட கோஎம்ப்ட் (COEMPT) நிறுவனம் மோசமான செயல்பாடு கொண்டதாக இருந்தபோதிலும், ஒப்பந்தம் அதற்கு எப்படி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்; ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான தொழில்நுட்ப விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்; மேலும், இதுகுறித்து ஒரு சுதந்திரமான நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தி டெலிகிராப்:

* நீட் தேர்வு குறித்த நிச்சயமற்ற சூழல், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களை பொறியியல் படிப்புகளை நோக்கித் தள்ளுகிறது. “26 நாட்களுக்குள், விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டி விட்டது; இது 3 லட்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் (DOTE) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘இது ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி’: ‘வந்தே மாதரம் பாடலின் முழுமையான வடிவத்தைப் பாட வேண்டிய அவசியமோ, அல்லது அப்பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டும் இசைக்கப்படும் போது எழுந்து நிற்க வேண்டிய கட்டாயமோ இல்லை என்று கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *