டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் பிரிந்து தனி அணியாக பாஜகவுக்கு ஆதரவு தர இருக்கும் நிலையில், கட்சித் தாவல் தடை சட்டத்தில் அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘பிரதமர் மோடியே பொறுப்பு’: ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு. இதற்குப் பிரதமர் நரேந்திர மோடியே “பொறுப்பு” என்றும், இந்த “கொள்ளை”யில் “பெரிய மனிதர்கள்” ஈடுபட்டிருந்தாலும் “சிறிய அதிகாரிகள்” குறி வைக்கப்படுவதாகவும் அக்கட்சி கூறியது.
தி இந்து:
* பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் சாவர்க்கர் 10 கருணை மனுக்களைத் தாக்கல் செய்தார்:. விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பேரன் சத்யகி சாவர்க்கர், புனேவில் உள்ள எம்.பி./எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தகவல். (இந்த சாவர்க்கரைத்தான் ‘மாபெரும் வீரர்’ என மோடி அரசு தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடி வருகிறது.)
* தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவின் கருத்துக்குக் காங்கிரஸ் கண்டனம். மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவ பலமும் 50% அதிகரிக்கும் என்று அரசு உறுதியளித்திருந்தும், தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை என்று விமர்சித்து ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் கட்சி, அத்தகைய திருத்தம் எதுவும் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியது.
தி டெலிகிராப்:
* நீட் மறுதேர்வுக்காக, வரும் 22ஆம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு தடை: செய்திகளைத் திருத்தும் வசதி ஜூன் 30 வரையிலும் முடக்கம். “15 கோடி சாதாரணப் பயனர்களை தண்டிப்பதா?” – ஒன்றிய அரசுக்கு டெலிகிராம் சிஇஓ கண்டனம். இந்தத் தடையால் எதுவும் நின்றுவிடப் போவதில்லை. வினாத்தாள் கசிவுகள் இப்போது பிற செயலிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டன” என்று தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘அணி மாற ஒவ்வொரு எம்.பி.க்கும் ரூ.15 கோடி பேரம்’: சிவசேனா (UBT) பிளவு குறித்த ஊகங்களுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத், எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு
* ஜெய்ப்பூர் போராட்டத்தில் கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே மீது தாக்குதல். ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் தான் அச்சுறுத்தப்படவில்லை என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) நிறுவனர் அபிஜீத் டிப்கே தெரிவித்தார்.
– குடந்தை கருணா
