அய்ந்து மாதங்களில் 6 அரசாணைகளைத் திரும்பப் பெற்ற த.வெ.க. அரசு!

2 Min Read
- Advertisement -

சென்னை, அக்.17- தமிழ்நாட்டில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமை யிலான தவெக அரசு பொறுப்பேற்று அய்ந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை அரசு பிறப்பித்த 6 அரசாணைகள் நடைமுறை சிக்கல்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஆறாவது உத்தரவு லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் திருக்கோயில்களில் கைப்பேசிகளைக் கொண்டு செல்ல பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கோயில்களில் வரிசையில் நின்று தரிசனம் செய்வார்கள், கைப்பேசி போன் கொடுக்கவும், வாங்கவும் வரிசையில் நிற்பதற்குள் சாட்சாத் கடவுளே நேரில் வந்து தரிசனம் தந்துவிடுவார் போல இருப்பதாக பக்தர்கள் புலம்பி வந்த நிலையில், அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இது தவெக அரசின் ஆறாவது திரும்பப் பெறும் அரசாணை என்றால் மற்ற அய்ந்து அரசாணைகளும் என்ன என்று பலருக்கும் சந்தேகம் எழலம். சிலருக்கு சில திட்டங்கள் நினைவுக்கு வரும்.

தவெக அரசு பொறுப்பேற்றதும், முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் ஜோதிடருமான ரிக்கி ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், தனிப்பட்ட நண்பர்களுக்கு அரசுப் பதவி வழங்குவதா என்று அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிலரும் கேள்வி எழுப்பியதால் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து (ஆா்டிஅய்) சட்டம்-ஒழுங்கு துறைக்கு விலக்கு அளிக்கும் அரசாணையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு, அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் ரத்து செய்தது.

தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சா் நிர்மல் குமார் வெளியிட்ட அறிவிப்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 24 உள்பிரிவு (4)-இன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் – ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனித வள மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்த்து இடதுசாரி மாணவர் இயக்கங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கக் கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டு, வழக்கம் போல அரசியல் மற்றும் மாணவர் அமைப்பிலிருந்து வந்த எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

திருவண்ணாமலையில் மெல்மா தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்த தவெக அரசு எடுத்த முடிவு, விவசாயிகளின் கடும் போராட்டத்துக்கு இடையே திரும்பப் பெறப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறை வட்டத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரித்து சமா்ப்பிக்க வேண்டும் என ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்கள், கண்டனங்கள் எழுந்த நிலையில் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிகழ்வுக்கும் அரசுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்த விவாதம் நடந்து வருகிறது.

இது மாவட்ட அளவில் பிறப் பிக்கப்பட்ட உத்தரவாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக இதுபோன்ற அரசாணைஉத்தரவுகள் வெளியிடப்படுவதும் எதிர்ப்பு எழுந்ததும் திரும்பப் பெறுவதும், நடைமுறைச் சிக்கல்களை முன்கூட்டியே கணிக்காமல், அறிக்கை வெளியிடுவது போன்றவை தவெக அரசின் நிர்வாகத்திறன் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திவிடும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *