செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஊராட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் அக்டோபர் 19 அன்று முடிவு

1 Min Read
- Advertisement -

செங்கல்பட்டு, அக். 17– செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட் டங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதி களின் பதவிக்காலம் வரும் 19ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்னுடன் ஊராட்சி நிர்வாகிகளின் பதவிக்காலத்தை முடிவுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 2021ஆம் ஆண்டு அக்.20ஆம் தேதி பதவியேற்றனர். இவர்களின் பதவிக்காலம் வரும் 19ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துதல், புதிய திட்டங் களுக்கு அனுமதி கோரும் தீர்மானங்களை நிறைவேற்றுதல், புதிய செலவினங்களை மேற் கொள்ளுதல் ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் வாய்மொழியாக வழங்கப்பட்டுள்ளன.

விழாக்காலம் வருவதால்  (19, 20 தேதிகள் விடுமுறை நாட்களாக உள்ளன. இதற்கு முந்தைய 17, 18ஆம் தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளாக உள்ளன. இதனால், 16ஆம் தேதி உள்ளாட்சி அலுவலகங்களின் கடைசி வேலைநாளாக அமைகிறது.

இந்தச் சூழலில் ஊராட்சி நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 16ஆம் தேதியுடன் முடிவுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அனைத்து ஊராட்சிகளிலும் வரவு, செலவுக் கணக்குகளை நிறைவு செய்து, அவற்றை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு தனி அலுவலர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *