வாக்காளர் பட்டியலில் இருந்து இசுலாமியர்களின் பெயர்களை நீக்கும் சதி: ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல்!

3 Min Read
- Advertisement -

இசுலாமியர்களை இந்தியக் குடிமக்கள் இல்லாமல் ஆக்கும் சூழ்ச்சியா? கருநாடகா மற்றும் உத்தரகாண்டில் ஆயிரக்கணக்கான இசுலாமியர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க 5 பா.ஜ.க. பிரமுகர்கள் விண்ணப்பித்து இதன் மூலம் இசுலாமியர்கள் வாக்கு உரிமையை இழந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநில வாக்காளர் பட்டியலி லிருந்து பெயர்களை நீக்குவதற்காக பெருமள விலான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்த அனைத்து தனிநபர்களும் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்பது  தனியார் ஊடகம் ஒன்று நடத்திய புலனாய்வு மூலம் அம்பலமாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் 5 சட்டமன்றத் தொகுதி களில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், முசுலிம் வாக்காளர்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டு நீக்கப் பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நியூஸ்லாண்ட்ரி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பெயர்களை நீக்கக்கோரி  5 பா.ஜ.க. பிரமுகர்கள் தனி நபர்கள் தாக்கல் செய்த  நீக்கம் செய்யப்படவேண்டிய பெயர் கொண்ட பரிந்துரை விண்ணம் 4,855 என்று பதிவாகியுள்ளது. குறிப்பாக, மூன்று தொகுதிகளில் பதிவான மொத்த ஆட்சேபனைகளில் 49 முதல் 99 சதவீதம் வரை வெறும் ஒரே ஒரு தனிநபரே தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறைகேடான மற்றும் ஒருதலைப்பட்சமான வாக்காளர் நீக்கப் பணிகள் ஜனநாயக முறைகள் மீதும், தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை மீதும் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இலக்காகக் கொண்டு வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கத் திட்டமிட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இந்த ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கருநாடகாவில் வாக்காளர் பட்டியல் முறைகேடு

கருநாடகாவில் முசுலிம் வாக்குகளை நீக்க வாக்களர் நீக்க பரிந்துரை விண்ணப்பம் படிவம் 7 பயன்படுத்தியதாக பிஜேபி தொண்டர்கள் ஒப்புதல் கொடுத்துள்ளனர்.

கருநாடகாவில் வாக்காளர் பட்டியலிலிருந்து முசுலிம் வாக்காளர்களின் பெயர்களை மொத்தமாக நீக்கும் நோக்கில், ‘படிவம் 7′ முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் புதிய ஒலிப்பதிவு வெளியாகி உள்ளது. மடிகேரி சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த பாஜக பூத் லெவல் ஏஜெண்டுகளான (பிஎல்ஏ) இணையர்கள் இருவரும் இந்தச் செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக கருநாடகாவின் முன்னணி கன்னட நாளிதழான ‘வார்த்தா பாரதி’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆடியோ பதிவின் விவரங்கள்

‘வார்த்தா பாரதி’ நாளிதழின் செய்தியாளர், சம்பந்தப் பட்ட பாஜக தொண்டர்களுடன் பேசிய தொலைபேசி உரையாடலின் குரல் பதிவு தற்போது வெளியாகியுள்ளது. அந்தப் பதிவில், அச்சிடப்பட்ட படிவம் 7 படிவங்களைப் பெற்றுக்கொண்டு, திட்டமிட்டு முசுலிம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவ தற்காக அவர்கள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ததை அந்தத் இணையர்கள் வெளிப்படையாக உறுதிப் படுத்தியுள்ளனர்.

இந்த அதிர்ச்சித் தகவல் கருநாடக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக முறையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கான வழிமுறைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் வாக்குரிமை திட்டமிட்டுப் பறிக்கப்படுவதாக எதிர்க் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த ஒலிப்பதிவு அத்தகையக் குற்றச்சாட்டுகளுக்கு நேரடிச் சான்றாகக் காட்டப்படுகிறது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

முறையற்ற வகையிலும், போலி முறைகளிலும் வாக்காளர் பெயர்களை நீக்கக் கோரி விண்ணப்பங்களை  தாக்கல் செய்தவர்கள் குறித்தும், இதற்குப் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் தேர்தல் ஆணையமும் அரசும் உடனடியாகச் சட்டப்படியான கடுமையான நடவடிக் கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. தேர்தல் சுதந்திரத்தையும் வெளிப்படைத்தன்மையையும் பாதுகாக்கும் வகையில் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

விரைவில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரவும் உள்ளூர வேலைகள் நடந்து வருகிறது, இதற்காக எதிர்கட்சிகளை ஒன்று சேரவிடாமல் செய்ய தேர்தல் கூட்டணி குழப்பங்களை ஏற்படுத்துவதில் அமித்ஷா வெற்றி பெற்றுவருவதாக கூறப்படுகிறது

குறிப்பாக அதிக எண்ணிக்கையை வைத்துள்ளன திமுக காங்கிரஸ் கூட்டணி முறிவு, சமாஜ்வாடி காங்கிரஸ் கூட்டணி முரன்பாடு போன்றவைகளை கூறுகிறார்கள்

இந்த நிலையில் பொது சிவில் சட்டம் கொண்டுவரும் போது வாக்குரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளும் என்று சட்டம் இயற்றும் போது கிட்ட்தட்ட நாட்டின் அனைத்து சிறுபான்மையினரும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறும் பெரும் அபாயம் ஏற்பட உள்ளது அதன் முன்னோட்டம் தான் நாடு முழுவதிலும் இசுலாமியர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *