பெங்களுரு முத்துமணி உடல் நலம் விசாரிப்பு

1 Min Read
- Advertisement -

பெங்களூரு, அக். 16- கருநாடக மாநிலத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவரும், மேனாள் செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நன்னனின் மகனுமான முத்துமணி நன்னன் அவரின் கண் நலம் பெற அறுவை சிகிச்சை பெற்று பெங்களூரு மாகடி சாலையிலுள்ள இல்லத்தில் ஓய்வு பெற்று வருகின்றார். 8.10.2026 அன்று காலை 11 மணிக்கு கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் சே.குணவேந்தன், செயலாளர் இரா.முல்லைக்கோ, பெங்களூரு தமிழ்ச் சங்க மேனாள் தலைவர் தி.கோ.தாமோதரன் ஆகியோர் நலம் விசாரித்தனர்.

முத்துமணியின் இணையர் முனைவர் கல்யாணியின் தாயார் கங்கா அம்மையார் அவர்களின் 86ஆம் பிறந்த நாள் விழாவின் ஏற் பாடுகள் நடைபெற்ற வேளையில் அம்மையார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறினர். கங்கா அம்மையாரின் இணையர் காரைக்குடி கவிஞர் கவிதரனும், அவரது பேரன் கவி நன்னனும் உடனிருந்தனர். முத்துமணி தந்தையார் நன்னனைப் போலவே கவிதரன் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நான்கு திரைப்படங்களுக்கு பாடல்கள் இயற்றி திரைப் பணிகளில் தந்தை பெரியார் கருத்துகளை தாங்கிய பாடல்களாகவும் அக்காலத்தில் இயற்றி சிறப்புப் பெற்றவர். முத்துமணியின் இல்லத்தினர் கல்விப் பணி மற்றும் களப் பணியில் சிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்காகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *