நகர்ப்புற மக்களின் பொருளாதார நிலை மோசம் ரிசர்வ் வங்கி ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக்.11 இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், ‘நகர்ப்புற நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு’ நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 19 முக்கிய நகரங்களைச் சேர்ந்த 6,054 பேரிடம் கடந்த மாதம் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளை ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது.இந்த ஆய்வில், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாக 54.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 50.5 சதவீதமாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 40.9 சதவீதமாகவும் இருந்தது.அதேநேரத்தில், பொருளாதார நிலை மேம்பட்டுள்ளதாக 25.3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 27.1 சதவீதமாக இருந்தது.

மக்களின் தற்போதைய பொருளாதார உணர்வை அளவிடும் குறியீடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 88.3 புள்ளிகளாக இருந்த இந்தக் குறியீடு, கடந்த மாதம் 87.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.மேலும், அடுத்த ஓராண்டில் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும் என்று 38.3 சதவீதம் பேர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, எதிர்கால பொருளாதார எதிர்பார்ப்பைக் குறிக்கும் குறியீடு 115.3 புள்ளிகளில் இருந்து 113.5 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.

உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு காரணமாக, அவற்றுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கான செலவினங்களை நகர்ப்புற மக்கள் குறைத்துக் கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவை தொடர்ந்து மக்களின் முக்கியக் கவலைகளாக இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களிடம் பாலியல் சீண்டல் : அர்ச்சகர் கைது

கிடாமங்கலம், அக். 11 கோவிலுக்கு வந்த பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அர்ச்சகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சியை சேர்ந்த குடும்பத்தினர், கிடாமங்கலம் அருகே கோவில் வெண்ணி பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு கடந்த 8.10.2026 அன்று வழிபாடு செய்ய வந்துள்ளனர். இக்கோவிலில் அர்ச்சகராக கோவில்வெண்ணியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 65) பணியாற்றி வருகிறார்.    இந்நிலையில், வழிபாடு செய்ய வந்தவர்கள், வழிபாடு செய்த பிறகு கோவிலை விட்டு வெளியே வந்தனர். அவர்களுடன் வந்த 29 வயது மதித்தக்க திருமணமாகாத பெண்ணை சண்டிஹோமம் சந்திக்க வருமாறு அர்ச்சகர் அழைத்தாராம்.

அந்தப் பெண்ணும் பூஜைத் தட்டுடன் அவர் பின்னால் சென்றுள்ளார். பூஜை தட்டை வாங்கும்போது அப் பெண்ணிடம் அர்ச்சகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து, அந்தப் பெண் கிடாமங்கலம் காவல் நிலையத்தில் அர்ச்சகரின் செயல் குறித்து சனிக்கிழமை புகார் அளித்தார். காவல்துறையினர் அர்ச்சகர் பிரபாகரனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *