லக்னோ, அக்.16 உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிரத் திருத்தத்தின் போது, வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவிலான விதிமீறல்களும் முறைகேடுகளும் நடந்துள்ளதாக ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ புலனாய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ‘ஈரோநெட்’ மென்பொருள், எவ்வித காரணமும் குறிப்பிடாமல் 85,854 வாக்காளர்களின் பெயர்களை நீக்கு வதற்கான படிவங்களை தன்னிச்சையாக ஏ.அய். மூலம் உருவாக்கியுள்ளதாகவும் இதில் 99 விழுக்காடு வாக்காளர்கள் இஸ்லாமியர்கள் என்றும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
சட்டவிதிகளின்படி ஒரு வாக்கா ளரை நீக்கத் தெளிவான காரணம் குறிப்பிடுவது கட்டாயமாகும். ஆனால், 85,854 படிவங்களில் காரணங்கள் ஏதுமின்றி, அல்லது “A”, “N”, “H”, “E” போன்ற ஒற்றை எழுத்துகள் மட்டுமே உள்ளீடு செய்யப்பட்டு தன்னிச்சை யாகப் படிவங்கள் உருவாக்கப்பட் டுள்ளன. இந்த நீக்க விண்ணப்பங்கள் அனைத்தும் ஆட்சேபனைகளுக்கான காலக்கெடு முடிந்த பிறகே மென்பொரு ளால் உருவாக்கப்பட்டுள்ளன.
16.18 லட்சம் வாக்காளர்கள் விவரம் மறைப்பு: புதிதாக சேர்க்கப்பட்ட 16.18 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி பொதுக் களத்தில் வெளியிடாமல் மறைத்து வைத்துள்ளார்.
மாநிலத்தில் இஸ்லாமிய வாக் காளர்களை மொத்தமாக நீக்குவதற்கு 200-க்கும் மேற்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இசிஅய் மென்பொருள் மூலமாக எந்தக் காரணமும் இன்றி 85,854 வாக்காளர் நீக்கப் படிவங்களில் தேர்தல் அதிகாரிகள் கையொப்பமிட வைத்ததை உத்தரப் பிரதேச தேர்தல் ஆணையர் நவீன் ரென்வேரா ஒப்புக்கொண்டார்
படிவம் 7 மூலம் வாக்காளர்களை நீக்குவதற்கு எதிராக 4,700 புகார்கள் மட்டுமே பெறப்பட்டதாகக் கூறி, 13.39 கோடி வாக்காளர்கள் கொண்ட மாநிலத்தில் இது மிகச் சிறிய எண் ணிக்கை என்று சாக்குபோக்கு கூறினார்.
தன்னிச்சையாக உருவாக்கப்பட்ட படிவங்களில் ஏன் காரணம் குறிப் பிடப்படவில்லை என்பதற்கோ, ஒற்றை எழுத்துகள் மட்டும் உள்ளீடு செய்யப்பட்டது குறித்தோ அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் இதுவரை உ.பி. தேர்தல் அதிகாரிக்கு ஆதரவாக எந்த அறிக்கையையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.
ஏற்கனவே லட்சக்கணக்கில் திடீரென புதிய வாக்காளர்கள் எந்த ஒரு காரணமும் இன்றி சேர்க்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஏ அய் மூலம் வாக்களர் நீக்கப்படிவம் உருவாக்கி அதில் இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர்களை நீக்கிய மோசடி தற்போது வெளியாகி உள்ளது. அரசியல் அரங்கில் அதிர் வலையை ஏற்படுத்தி உள்ளது.
