தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைந்தால் ஜனநாயகத்தின் வேரிலேயே நஞ்சு கலப்பதற்குச் சமம்! முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அதிரடி எச்சரிக்கை

- Advertisement -

புதுடில்லி, அக்.16 தேர்தல் முறைகளின் வெளிப்படைத் தன்மை மற்றும் தேர்தல் ஆணை யத்தின் சுதந்திரமான செயல்பாடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் கடுமையான எச்சரிக்கையையும் முக்கியக் கருத்துகளையும் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் அமைப்புகள் மற்றும் வாக்குரிமையின் ‘புனித’த்தன்மை காக்கப்பட வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்தி அவர் பேசிய தன் முக்கிய விவரங்கள் வருமாறு

“தேர்தல் ஆணையத்தின் நேர்மை மற்றும் நடுநிலைமையின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியானால், அது நாட்டின் ஜனநாயக அமைப் பின் அடிவேரிலேயே நஞ்சுக் கலப்பதற்குச் சமமாகும்.” தேர்தல் ஆணையர்களின் நியமனம் குறித்துப் பேசிய அவர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தொடக்கக் கட்டத்திலேயே அரசியலமைப்பு நிறுவனங்களின் சுதந்திரம் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டுமின்றி, அனைத்து தேர்தல் ஆணையர்களையும் ஒரே சீரான பதவி நீக்க நடைமுறைக்கு உட்படுத்தி, அவர்கள் எவ்வித அரசியல் அழுத்தமுமின்றிச் செயல்பட வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிகாரத்தில் இருக்கும் அமைப்புகளையும் நிறுவனங் களையும் முறையாகக் கண் காணிக்க, பொதுமக்களின் இடை விடாத விழிப்புணர்வே மிகச் சிறந்த காவலாளியாக (Watchdog) செயல்படும் என சுட்டிக்காட்டிய அவர், ஜனநாயகத்தைக் காப்பதில் குடிமக்களின் பங்கேற்பு மிக முக் கியமானது எனக் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் தேர்தல் முறைகள் மற்றும் வாக்குத் திருட்டு தொடர்பான விவாதங்கள் வலுத்துவரும் சூழலில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப்பின் இந்தக் கருத்துகள் பெரும் பரபரப்பையும் கவனத் தையும் ஏற்படுத்தியுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *