ஜோத்பூர், மே 18 கூட்டு பாலியல் வன்கொடுமை, பிளாக் மெயில் ஆகியவற்றால் விரக்தியடைந்த 2 சகோதரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
பாலியல் வன்கொடுமை
ராஜஸ்தான் மாநிலம் ஜோத் பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு உள்ளூரைச் சேர்ந்த மஹிபால் என்பவருடன் அறி முகம் ஏற்பட்டுள்ளது. அவர் அங்குள்ள இ-மித்ரா சேவை மய்ய ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். அவர் தன் னுடன் பழகிய இளம்பெண்ணின் ஆபாச காட்சிப் பதிவுகளை ரகசியமாக பதிவு செய் செய்தார். பின்னர் அந்த காட்சிப் பதிவுகளை காட்டி பிளாக் மெயில் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் மட்டும் அல்லாமல் அவரது நண்பர்களும் இளம் பெண்ணை மிரட்டி சுமார் 4 ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு பிளாக் மெயில் செய்து பணமும் பறித்துள்ளனர்.
தற்கொலை
பல ஆண்டுகளாக நீடித்த இந்த கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த இளம்பெண் கடந்த மார்ச் 20-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து இளம் பெண்ணின் சகோதரி காவல் துறையில் கடந்த ஏப்ரல் மாதம்
11-ஆம் தேதி புகார் அளித்தார். தனது சகோதரியின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் தானும் தற்கொலை செய்து கொள்வேன் என அவர் காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தார். எனினும் காவல்துறை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதனால் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் புகார் அளித்த சகோதரிக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். தற்கொலை செய்த பெண்ணின் காட்சிப் பதிவுகள் பொதுவில் வெளியிடுவோம் என கூறி அவரது சகோதரிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதனால் அந்தப் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் ஜோத்பூரில் ராஜ்புத் சமுதாயத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் உடற்கூராய்வு நடைபெற்ற மருத்துவமனை யில் போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் குறித்து ஜோத்பூர் எஸ்.பி. நித்யா அளித்த பேட்டியில், “முக்கிய குற்றவாளி மஹிபால் உட்பட 2 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்ற வாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவர். பாலியல் வன்கொடுமை புகாருக்கு நட வடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையினர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
