என்னுடைய கடமை எது?
எவன் ஆண்டாலும் சரி, இந்நாட்டு மக்களை, மனிதனை மதிக்க வேணும்; அதற்கெல்லாம் பாடுபட வேண்டும்; பாடுபட இடமளிக்க வேண்டும். இந்த லட்சியத்தை முன்வைத்து யார் பாடுபட்டாலும், இதை எங்கெல்லாம் நான் கண்டாலும் அங்கெல்லாம் நான் வலியப் போகிறவன்; ஆதரிக்கிறவன் – ஜாதி ஒழிய வேண்டும்; நாடு சுதந்திரம் அடைய வேண்டும்; காட்டுமிராண்டித் தன்மை மாறி அறிவாளி மக்களாக ஆக்கப்பட வேண்டும் என்ற கொள்கைகளை முன் வைத்து யார் பாடுபட்டாலும் அவர்களை ஆதரிப்பது என்னுடைய கடமை என்னும்போது இதில் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
