சென்னை சுற்றுவட்ட திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்! பள்ளி, கல்லூரிகளில் ‘பெரியார் கேட்கும் கேள்விகள்’ குறுநூலைப் பரப்புரை செய்ய முடிவு!

2 Min Read
- Advertisement -

சென்னை, அக். 15- சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களின் திராவிட மகளிர் பாசறை கலந்து ரையாடல் கூட்டம், பெரியார் திடலில் உள்ள பெரியார் சுயமரி யாதைத் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், மேற்கு சென்னை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திராவிட மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தந்தை பெரியாரின் கருத்துகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ‘பெரியார் கேட்கும் கேள்விகள்’ என்ற பாக்கெட் சைஸ் குறுநூலைச் சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று பரப்புரை செய்வது என முடிவு செய்யப் பட்டது.

ஒரு குறுநூலின் விலை ரூ.20. இதற்காக ரூ.10,000 மதிப்பில் 500 குறுநூல்களைப் பெற்று, மாண வர்களிடையே தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பத் திட்டமிடப்பட்டது.

கூட்டத்தில், திராவிட மகளிர் பாசறையின் அடுத்தகட்டத் திட்டங்கள், அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான செயல்திட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடியதைப் போலவே, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளையும் மகிழ்ச்சியுடன் சிறப்பாகக் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

500 குறுநூல்களைப் பெற்றுக்கொள்ள முன்வந்த தோழர்கள்!

– வடசென்னை திராவிட மகளிர் பாசறை சார்பில்: இளவரசி 100 குறுநூல்கள்.

– தென்சென்னை திராவிட மகளிர் பாசறை சார்பில்:
மு.பவானி 100 குறுநூல்கள்.

– ஆவடி மாவட்ட திராவிட மகளிர் பாசறை சார்பில்: அன்புச் செல்வி 100 குறுநூல்கள்.

– தாம்பரம் மாவட்ட திராவிட மகளிர் பாசறை சார்பில்: அருணா மற்றும் சு. உத்ரா 100 குறுநூல்கள்.

– திருவொற்றியூர் மாவட்ட திராவிட மகளிர் பாசறை சார்பில்: யுவராணி 100 குறுநூல்கள்.

இவ்வாறு மொத்தம் 500 குறுநூல்களைப் பெற்றுக்கொள்ளத் தோழர்கள் முன்வந்தனர்.

மேலும், வடசென்னை மாவட்டத்தின் சார்பில் ரூ.2,000 வழங்குவதாகப் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன் செந்தில்குமாரி தெரிவித்தார். மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை 100 குறுநூல்களைப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

இக்கூட்டத்தில், தாம்பரம் மாவட்ட மகளிரணித் தலைவர் மு.நாகவல்லி, லலிதா, பகுத்தறிவாளர் கழகத் தோழர் புஷ்பலதா, ஆய்வு மாணவி அனுசுயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *