தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1.61 லட்சம் பணியாளர்கள் நியமனம் இணைய வழியில் சுயமாகப் பதிவு செய்யும் வசதியும் அறிமுகம்!

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 15- தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்காக 1.61 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களின் விவரங்களைச் சுயமாகவேப் பதிவு செய்துகொள்ளப் பிரத்யேக இணையதள வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

1.61 லட்சம் பணியாளர்கள் களமிறக்கம்!

மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று துல்லியமாகத் தரவுகளைச் சேகரிக்கும் வகையில், ஆசிரியர் உட்பட 1.61 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இக்கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.

சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) வசதி:   பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே, அரசு வழங்கும் பிரத்யேக இணையதளப் பக்கத்திற்குச் சென்று தங்களது குடும்பத்தினரின் விவரங்களைப் பாதுகாப்பாகப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நேரடிச் சரிபார்ப்பு: இணையதளம் வாயிலாகப் பதிவு செய்தவர்களுக்கும், நேரில் வந்து விவரங்களைச் சேகரிக்கும் கணக்கெடுப்பாளர்கள் மூலம் தரவுகள் சரிபார்க்கப்பட்டு இறுதி செய்யப்படும்.

டிஜிட்டல் முறையின் சிறப்பம்சங்கள்:   இம்முறை தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதால், தரவுகள் விரைவாகவும் துல்லியமாகவும் தொகுக்கப்படும். பொதுமக்கள் தங்களின் நேரத்தைச் மிச்சப்படுத்தவும், தவறுகளின்றித் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யவும் இந்த இணையதள வசதி பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   கணக்கெடுப்புப் பணிகளுக்கான முறையான பயிற்சிகள் மற்றும் வழிமுறைகள் விரைவில் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *