வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும்! ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்!

1 Min Read

வேலூர், ஜூலை 27- வேலூர் விமான நிலையத்துக்கான பணிகள் ஏறக்குறைய முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், அதனை விரைவில் மக்கள் பயன் பாட்டுக்குத் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வேகமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். வேலூர் சங்கரன்பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ (Mann Ki Baat) நிகழ்ச்சியில் பாஜகவினருடன் இணைந்து கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பாக ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் ஏற்கெனவே பேசியுள்ளதாகவும், பணிகளை உடனடியாக விரைவுபடுத்தி விமான நிலையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *