2026-2027 கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

2 Min Read
- Advertisement -

2026-2027 கல்வியாண்டிற்கான

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு
பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

சென்னை, அக். 15- 2026-2027 கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

அதில், மார்ச் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதாகவும், மார்ச் 5ஆம்  தேதி முதல் ஏப்ரல் 1ஆம்  தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 3ஆம்  தேதி முதல் 29ஆம்  தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியிடப்படும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-2027 கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் தேர்வு மார்ச் 17ஆம் தேதியும், ஆங்கிலம் மார்ச் 25ஆம், கணிதம் மார்ச் 31ஆம், அறிவியல் 5ஆம், ஏப்ரல், சமூக அறிவியல் தேர்வு 9ஆம் ஏப்ரல், மற்றும் விருப்ப மொழி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-2027 கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ், இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு மார்ச் 5ஆம் தேதியும்; ஆங்கிலத்திற்கான தேர்வு மார்ச் 16ஆம் தேதியும்; வேதியியல், கணக்கியல், புவியியல் மார்ச் 18ஆம் தேதியும்; கணிதம், விலங்கியல், வணிகவியல் மார்ச் 22ஆம் தேதியும்; இயற்பியல், பொருளியல் மார்ச் 24ஆம் தேதியும்; கணினி அறிவியல், உயிரி வேதியியல் தேர்வுகள் மார்ச் 30ஆம் தேதியும்; உயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வுகள் ஏப்ரல் 1ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 7ஆம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-2027 கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இதர மொழிப்பாடங்கள் தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதியும்; ஆங்கிலம் படத்திற்கான தேர்வு மார்ச் 8ஆம் தேதியும்; வேதியியல், கணக்கியல், புவியியல் தேர்வுகள் மார்ச் 12ஆம் தேதியும்; கணினி அறிவியல், உயிரி வேதியியல் தேர்வுகள் மார்ச் 15ஆம் தேதியும்; உயிரியியல், தாவரவியல், வரலாறு தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதியும்; இயற்பியல், பொருளியல் தேர்வுகள் மார்ச் 23ஆம் தேதியும்; கணிதம், விலங்கியல், வணிகவியல் தேர்வுகள் மார்ச் 29ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 7ஆம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *