கல்விச் சேவைக்குச் சிகரம் சேர்த்த மகுடம் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு ‘நவரத்னா கல்விச்செம்மல் விருது’!

1 Min Read
- Advertisement -

திருச்சி, அக்.15- திருச்சி,பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் பா.பாபி பிரசன்னாவுக்கு, கல்வித் துறைக்கு அவர் ஆற்றிவரும் முன்மாதிரியான மற்றும் சிறப்பான சேவையைப் பாராட்டி மதிப்புமிக்க ‘நவரத்னா கல்விச்செம்மல் விருது – 2026’ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாள பட்டியைச் சேர்ந்த பசுமை வாசல் பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் நாளை முன்னிட்டு இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

கல்வி வளர்ச்சிக்கும் மாணவர் களின் அறிவுசார் வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் பங்காற்றிவரும் சிறந்த ஆசிரியர்களை மரியாதை செய்யும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பா.பாபி பிரசன்னாவுக்கு ‘நவரத்னா கல்விச்செம்மல் விருது – 2026’ வழங்கப்பட்டதையொட்டி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் தங்கள் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *