திருச்சி, அக்.15- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை கணித ஆசிரியர் கி.ஜெயகாந்தனுக்கு, கல்வித்துறைக்கு அவர் ஆற்றிவரும் சிறப்பான சேவையைப் பாராட்டி மதிப்புமிக்க ‘ஆசான் விருது’ (AASAN AWARD) வழங்கிச் சிறப்பிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற விழாவில், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் (Rotary Club of Madras North) அமைப்பின் சார்பில் 2026-2027ஆம் ஆண்டிற்கான இந்த விருது வழங்கப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஜெயகாந்தன், கல்விப்பணியில் காட்டிவரும் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில் இந்தச் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
விழாவில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரொட்டேரியன் எஸ்.நாகராஜன், செயலாளர் ரொட்டேரியன் எஸ். திவ்யா மற்றும் ஆசான் விருதுகளின் தலைவர் ரொட்டேரியன் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு விருதினை வழங்கினர்.
ஆசிரியர் ஜெயகாந்தனுக்கு ஆசான் விருது வழங்கப்பட்டதையொட்டி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் தங்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
