அன்னை மணியம்மையார் அரங்கில் 10.10.2026 அன்று பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. ஆவடி மாவட்ட கழகச் செயலாளர் க.கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், தலைமையுரையில், இந்த கூட்டத்தின் முக்கியத்தையும், நோக்கத்தையும் தெளிவுபடுத்தினார். சிறப்புரையை படவிளக்கங்களுடன் சிறப்பு நிலை மற்றும் துணை இயக்குநர் (ஓய்வு) ஏவுதள செயல்பாட்டுப் பிரிவு அறிவியலாளர் க.கிரகதுரை, ‘இஸ்ரோ மற்றும் ராக்கெட் பரிணாம வளர்ச்சி’ தலைப்பில் சிறப்பான உரையாற்றினார். நிகழ்ச்சி முடிவில் தோழர்கள் பல வினாக்களை எழுப்பினர்கள் – சிறப்புரையாளருக்கு விழா சார்பில் பயனாடை, புத்தகம் நினைவுப் பரிசாக கொடுக்கப்பட்டது. தென்சென்னை மாவட்ட ப.க. தலைவர் மு.இரா.மாணிக்கம் நன்றியுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
