கழகத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஒரத்தநாடு ஒன்றியம் சேதுராயன் குடிக்காடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆ. பிரபாகரன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். பெரியார் பெருந்தொண்டர் அரங்கசாமி, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், திமுக ஒரத்தநாடு மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்ல. ரமேஷ்குமார், ஒரத்தநாடு பேரூராட்சி உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: சேதுராயன்குடிக்காடு ராஜப்பன் குடும்பத்தினர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் (19-09-2026)

 

திராவிடர் கழகம்

அண்மையில் மறைவுற்ற ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் சேதுராயன்குடிக்காடு மா.இராஜப்பன் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது வாழ்விணையர், மகன்கள் சேகரன், ரமேஷ், சுரேஷ் மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
உடன்: மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், பேராசிரியர் பர்வீன், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாநில கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்ல.ரமேஷ்குமார், பி பெரியார்நேசன், பெரியார் பெருந்தொண்டர் அரங்கசாமி, சேதுராயன் குடிக்காடு பிரபாகரன், பெரியார் நேசன் (19-09-2026)

 

திராவிடர் கழகம்

 பெரியார் பெருந்தொண்டர் அரங்கசாமிக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.  ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் தெற்கு நத்தத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர் சண்முகம் – சரோஜா நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி நூலகம் ஆகியவற்றை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, வடக்கு ஒன்றியச் செயலாளர்
அ. சுப்பிரமணியன், வீதி நாடகக்கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், பேராசிரியர் உ. பர்வீன். பெரியார் பெருந் தொண்டர் தெற்கு நத்தம் சண்முகம் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அறிவித்து வரவேற்றார். (19-09-2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *