மென் பொருளால் வரையறுக்கப்பட்ட மின்சார வாகனங்கள் அறிமுகம்!

- Advertisement -

மதுரை, அக்.15 சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசு ஏற்படுத்தாத வகையில் முதல் மென்பொருள் வரையறுக்கப்பட்ட முழு மின்சார சிறப்பு முதன்மை எஸ்.யு.வி. மாடலான இ.எக்ஸ் 90 என்ற வாகனத்தை வோல்வோ கார் இந்தியா நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்துகிறது.

இந்திய வாகன சந்தையில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமாகிய வோல்வோ அறிமுகப்படுத்தும் முதல் மென்பொருள் வரையறுக்கப்பட்ட வாகனம் இதுவாகும். இந்த வாகனம் பயணிகளின் பாதுகாப்பை மய்யமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்.யு.வி.யில் அய்ந்து கேமராக்கள், அய்ந்து ரேடார்கள் மற்றும் 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 3டி காட்சியுடன் கூடிய 360 டிகிரி கேமரா, பைலட் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ்கன்ட் ரோல், பயணிகளின் இருப்பைக் கண்டறியும் தொழில் நுட்பம் மற்றும் சாலையில் செல்லும்போது மோதலைத் தவிர்க்கும் அமைப்புகள்  ஆகியவை பயணிகளையும், பாதசாரிகளையும் பாதுகாக்க உதவுகின்றன என இந்நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஜோதி மல்ேஹாத்ரா தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *