கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

- Advertisement -

சென்னை, அக். 15- கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம்” என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மத நல்லிணக்கத்திற்காக் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கோட்டை அமீரின் பெயரால் “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் குடியரசு நாள் விழாவின் போது வழங்கப்படுகிறது.

ரூ.5,00,000/- (ரூபாய் அய்ந்து இலட்சம் மட்டும்)க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினை பெற தகுதியுடையவராவர். இப்பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

வரும் 26.01.2027 அன்று குடியரசு நாள் விழாவின்போது வழங்கப்படவுள்ள பதக்கத்திற்கு தகுதியானவரை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் (Applications) மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 அவர்களுக்கு 15.12.2026-க்கு முன்பாக அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பதக்கம் பெற தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்பட்டு முதல்-அமைச்சரால் 26.01.2027 குடியரசு நாளன்று பதக்கம் வழங்கி மரியாதை செய்யப்படுவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *