வேளாண் பட்ஜெட் திருப்பதி சென்றால் பாவம் போய்விடுமா? தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

2 Min Read

சென்னை, ஆக. 4- ‘விவசா யிகளைச் சந்திக்காமல் புறக்கணித்து விட்டு, வேளாண் பட்ஜெட்டை திருப்பதிக்குத் தூக்கி செல்வதால் உங்கள் பாவங்கள் போய்விடுமா?’ என தமிழ்நாடு அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள எக்ஸ் பதிவில் கூறப் பட்டுள்ளதாவது:

காவிரி விவசாயிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சை யில் திரண்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் போராட்டம் இன்னும் தீவிரமாகும்.

விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக் ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதி நிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திமுக சார்பில் நன்றி.

ஜூன் 12இல் வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை. காவிரி பெருக் கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்.

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கருநாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரை தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது.

அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?. முழுக் கடன் தள்ளுபடி என வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்த த.வெ.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

மேகதாது அணை கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கருநாடகத்துடன் பேச்சு வார்த்தைக்குச் செல்ல துடியாய் துடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், கருநாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதலமைச்சருக்கு நேரமில்லையா? விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக்கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா? நாக்பூரில் நம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக்கூட கண்டனம் தெரிவிக்காமல், கள்ள மவுனம் காக்கிறார், திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர்.

விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல், வாக்குறுதியளித்த படி முழுக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும்.

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை தி.மு.க.வின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *