“இதுதான் த.வெ.க. அரசின் ‘மாற்ற’ அரசியலா?” கனிமொழி எம்.பி. கேள்வி

- Advertisement -

சென்னை, அக். 15- “கொள்ளை விலையில் மின்சாரம் கொள் முதல் செய்து தமிழ்நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிப்பது தான் தவெக அரசின் ‘மாற்ற’ அரசியலா?” என்று கனிமொழி எம்.பி. விமர்சனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல், காற்று இல்லை, மழை இல்லை என நாள்தோறும் கதையடித்துவிட்டுக் கொண்டிருந்தவர்கள், உண்மைகளை மறைக்க முடியாமல் இன்றைக்குத் தமிழ்நாடு வரலாற்றிலேயே இல்லாத அளவில் யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10-க்குக் குறைவாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த அரசின் மெத்தனத்தால் இன்றைக்கு ரூ.35-க்கு வாங்கும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொன்னால் கஜானா காலி என கையை விரிப்பவர்கள், இன்று கொள்ளை விலையில் கொள்முதல் செய்து தமிழ்நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்க உள்ளனர். இதுதான் தவெக அரசின் ‘மாற்ற’ அரசியலா?” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *