தி.மு.க. கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.பி.அய். முகமது முபாரக் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நன்னிலம், ஏப். 9– திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.அய். கட்சியைச் சார்ந்த முகமது முபாரக் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிகழ்ச்சியின் போது நன்னிலம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை முகமது முபாரக் மாலை அணிவித்து கூட்டணி கட்சித் தோழர்களில் ஒலி முழக்கத்துடன் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ். எஸ்.எம்.கே.அருண் காந்தி, மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ. மோகன், மாவட்ட காப்பாளர் வீர கோவிந்தராசு, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வீரையன், மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் செ.இரவிக்குமார், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அறிவுச்சுடர், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கரிகாலன், தமிழவன், நன்னிலம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சஞ்சீவி, தமிழ்மணி, சரவணன், குடவாசல் ஒன்றிய தலைவர் ஜெயராமன், பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் நன்னிலம் நகரச் செயலாளர் ஒன்றியச் செயலாளர்கள் மனோகரன், கேப்டன் செல்வராஜ், பேரூராட்சி தலைவர் ராஜூ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய செயலா ளர் டேவிட், மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன், காங்கிரஸ் பேரியக்கம் சார்பில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் உலகநாதன், தேமுதிக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், மதிமுக பொறுப்பாளர்கள் சிவா, மணிவண்ணன், எஸ். டி,பி,அய். கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் ஆசிப், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய தலைவர் வாக்குறுதி, மாவட்டத் துணைத் தலைவர் நன்னிலம் அசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில் மனு தாக்கல் செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *